ETV Bharat / state

ஆளில்லாத கடையில் டீ ஆத்திய அமித்ஷா...! - பொதுக்கூட்டம்

புதுக்கோட்டை: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்துகொண்ட பொதுக்கூட்டம் மக்கள் கூட்டமே இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது

அமித்ஷா
author img

By

Published : Apr 3, 2019, 11:31 AM IST

தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. தேசிய தலைவர்கள் அனைவரும் தமிழ்நாட்டிற்கு படை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவருவதை ஒட்டி பாஜக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு ஆதரவு திரட்டும் வகையில் அமித்ஷா தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அதன்படி, நேற்று மாலை புதுக்கோட்டை அருகே உள்ள லேனா விளக்கு பகுதியில் பாஜக சார்பில் மாபெரும் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக கூட்டணி கட்சிகள்ஆகிய கூட்டணி கட்சிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்துக்கு அமித்ஷா நேற்று மதியம் 2.30மணிக்கு ஹெலிகாப்டரில் வருவதாக கூறியிருந்த நிலையில், மாலை 4.15 மணிக்கு சுதர்சன் கல்லூரியில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். ஒரு தேசியத் தலைவர் வரும் மாபெரும் கூட்டம் ஆள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரங்கமே வெறிச்சோடி கிடந்தாலும் அமித்ஷா உரையாற்றினார். இந்நிலையில், அப்பகுதியாக சென்ற எதிர்க்கட்சியினர் சிலர்,"ஆளில்லாத கடைக்கு யாருக்குடீ ஆத்திக் கொண்டிருக்கிறார்?" கிண்டலடித்துள்ளனர்.

Intro: "ஆளில்லாத கடைக்கு டீ ஆத்திய அமிட்ஷா"..

Body:வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் பிஜேபி சார்பாக பிரச்சாரத்தை அமித்ஷா தற்போது நடத்தி வருகிறார் இந்நிலையில் நேற்று மாலை புதுக்கோட்டை மாவட்டத்தில் லேனா விளக்கு பகுதியில் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
பிஜேபி கூட்டணியான அதிமுக வீரமுத்தரையர் சங்கம் பிஜேபி ஆகிய கூட்டணி கட்சிகள் பங்கேற்றனர். நேற்று மதியம் இரண்டு முப்பது மணிக்கு ஹெலிகாப்டரில் வருவதாக கூறியிருந்த நிலையில் அதிமுகவினர் சுற்று வட்டாரத்தில் உள்ள ஊர்களில் இருந்து டெம்போவில் வண்டி வண்டியாக ஆட்களைக் கொண்டு வந்து இறங்கினர். இதனால் அங்கு போடப்பட்டிருந்த அரங்கம் முழுவதும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பார்ப்பதற்கு ஒரு சண்டை கடை போல இருந்த நிலையில் காவல்துறையினராலும் மக்களை சமாளிக்க முடியாமல் இருந்தது. பின் மாலை 4 15 மணி அளவில் அமிர்ஷா புதுக்கோட்டை மாவட்டம் சுதர்சன் கல்லூரியில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி பின் காரில் கூட்டம் நடக்கும் மேடைக்கு வந்தடைந்தார் அதிமுகவினர் மற்றும் கூட்டணிக் கட்சிகள் பெரும் வரவேற்பை அளித்தனர். ஆனால் அவர் பேசத் துவங்கும் முன்பே அங்கு கூடியிருந்த மக்கள் கலைந்து சென்றனர் அரங்கமே வெறிச்சோடிய நிலையில் அமித்ஷா உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்பகுதி வழியே செல்லும் மக்கள், "ஆளில்லாத கடைக்கு யாருக்கு டீ ஆத்திக் கொண்டிருக்கிறார்?"என்று நக்கலாக நகர்த்திச் சென்றனர். ஆனால் கட்சி தொண்டர்கள் கேமரா மறைப்பதால் தான் கூட்டம் கலைந்து சென்று விட்டது என்று கேமரா மக்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஒருபுறம் மக்கள் கலைந்து சென்றதும், ஒருபுறம் கட்சித் தொண்டர்கள் கேமராமேன்கள் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், அமித் ஷா மற்றும் எச் ராஜா அவரவர் பாட்டுக்கு உரையாற்றிக் கொண்டிருந்த பெரும் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.