ETV Bharat / state

'நாசா' செல்லும் அரசுப்பள்ளி மாணவிக்கு ஏழ்மை தடை!

புதுக்கோட்டை: நாசா விண்வெளி ஆய்வு மையம் செல்வதற்கான போட்டியில் தேர்வாகியும் ஏழ்மையினால் அமெரிக்கா செல்ல முடியாமல் தவிக்கும் அரசுப்பள்ளி மாணவி ஜெயலெட்சுமி.

author img

By

Published : Dec 13, 2019, 12:07 PM IST

Updated : Dec 13, 2019, 12:41 PM IST

Pudhukottai
Pudhukottai

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயலெட்சுமி. ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் இவர் அமெரிக்காவின் go4guru என்ற நிறுவனம் நடத்திய சர்வதேச விண்வெளி அறிவியல் போட்டியில் வெற்றிப்பெற்று நாசா விண்வெளி ஆய்வு மையம் செல்லத் தேர்வாகியுள்ளார். நாசா செல்ல வாய்ப்புக் கிடைத்தும் அமெரிக்கா சென்றுவர பணமில்லாததால் தவித்துவருகிறார்.

இதுகுறித்து மாணவி ஜெயலட்சுமி, "எனது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். அப்பா முந்திரி விவசாயம், அம்மா மனநலம் பாதிக்கப்பட்டவர். சிறுவயதிலிருந்தே விண்வெளிப் பற்றி தெரிந்துகொள்வதில் எனக்கு ஆர்வம் உண்டு. நாசா செல்ல go4guru எனும் நிறுவனம் அறிவியல் தேர்வு நடத்திவருவதாக செய்தித்தாளில் படித்தேன். கணினி மூலம் தேர்வென்பதால், சித்தப்பாவின் கைப்பேசியில் தேர்வெழுதி தேர்ச்சிபெற்றேன்.

'நாசா' செல்லும் அரசுப்பள்ளி மாணவி

அமெரிக்கா சென்றுவர 1 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. அவ்வளவு பணத்தை எனது குடும்பத்தால் தர இயலாது. ஏழ்மையில் இருக்கும் எனக்கு தனிநபர், தொண்டு நிறுவனங்கள் பண உதவி செய்தால் அமெரிக்கா சென்று அங்கு நடக்கும் போட்டியில் பங்குபெற்று வெற்றியுடன் இந்தியாவிற்கு திரும்புவேன்" என்றார்.

'நாசா' செல்லும் அரசுப்பள்ளி மாணவியின் பேட்டி

இதையும் படிங்க: 'விண்வெளியில் தொடங்கியாச்சு ஹோட்டல்' - குடியேறப் போறது யாருனு தெரியுமா?

Intro:Body:நாசாவிற்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவி.
ஏழ்மையில் தவிப்பதால் நிறைவேறுமா நாசா கனவு??

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயலெட்சுமி. புதுக்கோட்டை மாவட்டத்தில் ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு விஞ்ஞான சம்பந்தமான கட்டுரை போட்டியில் கலந்து கொள்ள go4guru என்ற அமெரிக்க நிறுவனம் நடத்திய சர்வதேச விண்வெளி அறிவியல் போட்டியில் ஆன்லைன் மூலம் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
ஒரு அரசு பள்ளியில் தமிழ் வழிக்கல்வி பயிலும் மாணவி இந்த தேர்வில் வெற்றி பெற்றிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது என பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து மாணவி ஜெயலட்சுமி தெரிவித்ததாவது,

எனது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் அம்மா மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கிறார் அப்பா குடும்பத்தை கண்டுகொள்வதில்லை. எங்கள் ஊரில் முந்திரி விவசாயம் செய்து வருகிறார்கள் அதனால் முந்திரி உரிப்பது போன்ற சிறு தொழில்களை செய்தால் கொஞ்சம் பணம் கிடைக்கும். எங்கள் பள்ளியில் நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொள்வேன் அதில் வெற்றி பெறும் பொழுது பரிசுத்தொகை கிடைக்கும் இதுபோன்ற பணத்தை வைத்துதான் படித்துக்கொண்டிருக்கிறேன். சிறுவயதிலிருந்தே விண்வெளி ஆராய்ச்சி என்பது எனக்கு மிகவும் பிடிக்கும் இதுபற்றிய விவரத்தை செய்தித்தாளில் படித்த போது இதை எழுத வேண்டுமென தோன்றியது. கம்ப்யூட்டர் சென்டரில் இந்த தேர்வு எழுத ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் ரூபாய் கேட்டார்கள் அந்த பணம் என்னிடம் இல்லாததால் எனது சித்தப்பாவின் போனிலேயே இணையதளத்தை பயன்படுத்தி தேர்வு எழுதினேன் இரண்டு வாரத்திற்கு முன்பு தேர்வு முடிவில் நான் தேர்ச்சி ஆகியிருந்தேன் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ஆனால் அமெரிக்கா செல்வதற்கு 1,69,000 ரூபாய் தேவைப்படுகிறது பாஸ்போர்ட்டை எனது பள்ளி ஆசிரியர்கள் பணம் கொடுத்து வாங்கி தந்தார்கள். அதனால் எனக்கு யாரேனும் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் எனக்கு அமெரிக்கா செல்வதற்கு பணம் கொடுத்து உதவினால் நிச்சயமாக அமெரிக்கா சென்று அங்கு நடக்கும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியுடன் இந்தியாவிற்கு திரும்புவேன் என்று தெரிவித்தார்.

மாணவி ஜெயலட்சுமியை குறிப்பு பள்ளியின் தலைமையாசிரியர் தெரிவித்ததாவது,

ஜெயலட்சுமி இயற்கையாகவே நிறைய திறமைகளைக் கொண்டவர். வகுப்பிலேயே நன்றாக படிக்க கூடிய மாணவி பத்தாம் வகுப்பில் உலகின் முதலாவது மாணவியாக வந்தவர். இந்த தேர்வில் தேசப்பற்று நான் சொன்ன பேச்சைக் கேட்பதில்லை மகிழ்ச்சி அளிக்கிறது வேலைக்கு அமெரிக்கா செல்ல தேவையான தொகையை உதவி கேட்டு மாவட்ட ஆட்சியர் அமைச்சர்களிடம் தெரிவித்திருக்கிறார் உதவி செய்வதாக கூறி இருக்கிறார்கள் இருப்பினும் தன்னார்வமாக யாரும் முன்வந்து உதவி செய்தால் நன்றாக இருக்கும் கண்டிப்பாக ஜெயலெட்சுமி வெற்றியுடன் திரும்புவார் என்று தெரிவித்தார்.Conclusion:
Last Updated : Dec 13, 2019, 12:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.