புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் கரோனா ஊரடங்கு தளர்விற்குப் பிறகு சில நாள்களாக மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுவருகின்றனர்.
அதன்படி நேற்று (ஜூன் 14) மதியம் 1 மணி அளவில் ஜெகதாப்பட்டினத்திலிருந்து 148 விசைப்படகுகளும், கோட்டைப்பட்டினத்திலிருந்து 285 விசைப்படகுகளும் கடலுக்குச் சென்றன.
அதையடுத்து இன்று 80 விழுக்காடு விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். மீதமுள்ள மீனவர்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மீனவர்கள், "கரோனா ஊரடங்கு காரணமாக கடலுக்குச் செல்ல அனுமதியில்லாமல் வாழ்வாதாரம் பாதித்து இருந்துவந்தோம்.
தற்போது அனுமதி கிடைத்துள்ளது. ஆனால் மீன், நண்டு, இரால், கணவாய் வரத்து குறைவினால் வருமானம் கிடைக்கவில்லை. கிடைக்கூடிய குறைவான மீன்களையும் வியாபாரிகள் சொற்ப விலைக்கு கேட்கின்றனர்" என வருத்தம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஏரியில் மீன் பிடித்தவர்கள் காவல்துறையினரை கண்டு தப்பி ஓட்டம்!