புதுக்கோட்டை: கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் சிவலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் கோயம்புத்தூரிலிருந்து பொன்னமராவதியை நோக்கி வந்த அரசுப் பேருந்தில் திண்டுக்கல்லில் ஏரி கொட்டாம்பட்டியில் இறங்கியுள்ளார்.
இவர் ஒன்பது சவரன் தங்கச் சங்கிலி, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, 2,000 ரூபாய் பணம், ஓட்டுநர் உரிமம், வங்கி ஏடிஎம் போன்றவை அடங்கிய கைப்பையை பேருந்தில் தவறவிட்டு இறங்கியுள்ளார்.
பேருந்திலிருந்து இறங்கிய பிறகே கைப்பையை அரசுப் பேருந்தில் தவறவிட்டது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் பொன்னமராவதி வந்தடைந்த பேருந்தில் கிடந்த கைப்பையை ஓட்டுநர் தவச்செல்வம், நடத்துநர் மனோகரன் ஆகிய இருவரும் பேருந்து பணிமனை பொறுப்பு மேலாளர் கருப்பையாவிடம் ஒப்படைத்தனர்.
இதனைத்தொடர்ந்து கருப்பையா உரிய விசாரணை மேற்கொண்டு மகாலட்சுமியிடம் அவர் தவறவிட்ட கைப்பையை ஒப்படைத்தார். பெண் தவறவிட்ட பையை நேர்மையாகக் கொண்டுசேர்த்த ஓட்டுநர் தவச்செல்வம், நடத்துநர் மனோகரன், கருப்பையா ஆகியோரைப் பொதுமக்கள் பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க: 'நான் வளர்த்த ஆட்டை வெட்ட போறாங்க காப்பாத்துங்க கலெக்டர்!'