தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்றால் மாணவர்கள் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று கல்வி கற்க முடியாத சூழல் உள்ள நிலையில், கல்வித் தொலைக்காட்சி வாயிலாக கற்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கல்வி மாவட்டத்தில், கல்வித் தொலைக்காட்சி வகுப்பு நடைபெறும்போது மாணவர்கள் கவனிக்கிறார்களா என்பதை மாணவர்களின் வீடுகளுக்கே சென்று மாவட்டக் கல்வி அலுவலர் ப.சண்முகநாதன் ஆய்வு செய்துவருகிறார்.
ஆய்வுப் பணி
அதன்படி, இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எஸ்எஸ்எல்சி வகுப்பு மாணவி லத்திகா சரணின் வீட்டுக்குச் சென்று மாணவியுடன் அவர் ஆலோசித்தார்.
அப்போது, பள்ளி துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி, பள்ளியின் தலைமையாசிரியர் ஆர்.தமிழ்செல்வி உள்ளிட்டோர் உடனிருந்தனர். மாணவர்களின் கல்வித் தரனை மேம்படுத்தும் நோக்கில் ஆய்வுப் பணி மேற்கொண்டுவரும் மாவட்டக் கல்வி அலுவலரை பெற்றோர்கள் வரவேற்றனர்.
இதையும் படிங்க: 'கோவை போலீசாருக்கு இனி சுழற்சி முறையில் வார விடுமுறை!'