ETV Bharat / state

'நந்தவனம் குப்பை மேடு ஆன கதை' - சீரமைக்க வலியுறுத்தல்! - Pudukkottai

புதுக்கோட்டை: வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ பிரகதாம்பாள் ஆலயத்தின் நந்தவனம் பகுதியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Brahadambal Temple
author img

By

Published : Aug 30, 2019, 9:51 AM IST

புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் பரம்பரையின் குலதெய்வக் கோயிலான ஸ்ரீ பிரகதாம்பாள் குடைவரை கோயில் வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இங்குள்ள சுமார் ஐந்து ஏக்கர் நிலம் நந்தவனம் என்ற பெயரில் அறியப்படுகிறது. இயற்கை எழில்மிகு தோற்றத்துடன் பூச்சிகள், பறவைகள், சிறிய உயிரினங்களின் அடர்த்தியான தொகுப்புடன் காட்சியளித்து வந்த நந்தவனம் கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலின் தாக்கத்தால் உருக்குலைந்து போனது.

மேலும் நந்தவனத்தில் இருந்த குளம் தற்போது குப்பை மேடாக காட்சியளிப்பதோடு தூர்வாரப்படாமல் அழிவின் விளிம்பில் உள்ளது. கஜா புயலின் போது சாய்ந்த மரங்கள் தற்போது வரை அப்புறப்படுத்த படாமலும் நந்தவனம் அமைந்துள்ள பாதுகாப்பு வேலிகள் சேதமடைந்து இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பிரகதாம்பாள் கோயில் வளாகத்தை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
இதனை குடிமராமத்து பணிகள் மூலம் சீரமைத்து மீண்டும் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர் ராமராஜனிடம் கேட்டபோது, தமிழ்நாட்டிலேயே கோயில்கள் அதிகமாக இருக்கும் ஊர் புதுக்கோட்டை தான் எனவும், அனைத்து கோயில்களையும் பராமரிக்க தங்களுக்கு நிதி பற்றாக்குறை உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், அரசு ஒதுக்கும் நிதி அனைத்து கோயில்களையும் பராமரிக்க போதுமானதாக இல்லை என்று கூறிய அலுவலர் ராமராஜன், நந்தவனம் பகுதி மிகவும் அழகான பகுதி அதனை விரைவில் சீரமைப்போம் எனவும் உறுதியளித்தார்.

Intro:"நந்தவனம் நொந்தவனம் ஆகிவிட்டது" சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை..

Body:புதுக்கோட்டை மாவட்டத்தின் சிறப்பு மிக்க வரலாற்று சுவடுகளை தாங்கி நிற்கும் ஸ்ரீ பிரகதாம்பாள் ஆலயத்தின் நந்தவனம் பகுதியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை..

புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் பரம்பரையின் குலதெய்வ கோவில் மற்றும் இந்திய வரலாற்றில் இடம் பிடித்த கோவிலும் ஆன ஸ்ரீ பிரகதாம்பாள் குடைவரை கோவிலில் இருக்கும் சுமார் 5 ஏக்கர் நிலம் நந்தவனம் என அழைக்கப்படுகிறது. இந்த நந்தவனம் கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலின் தாக்கத்தால் இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்து போனது.
முன்பு கோவிலுக்கு தேவையான அனைத்துமே இந்த நந்தவனத்தில் தான் விலையை வைத்து பயன்படுத்தினார்கள் என்பது வரலாறு தற்போது பெரியவர்கள் சிறியவர்கள் என அனைவருமே பொழுதுபோக்கும் ஒரு இடமாக இருந்து வந்தது. மேலும் நந்தவனத்தில் இருந்த குளம் தற்போது சாக்கடைகள் நிரம்பி அசுத்தமாக காட்சியளிக்கிறது. கஜா புயலின் போது சாய்ந்த மரங்கள் தற்போது வரை அப்புறப்படுத்த படாமலும் நந்தவனம் அமைந்துள்ள பாதுகாப்பு வேலிகள் சேதமடைந்த இருப்பதாகவும் மக்களின் பயன்பாட்டுக்கு இதை விரைவில் கொண்டுவர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நந்தவனத்தை பார்த்து வளர்ந்தவர்கள் அனைவருமே தற்போது "நந்தவனம் நொந்தவனம்"ஆகி விட்டதே என கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரியான ராமராஜன் என்பவரிடம் கேட்டபோது,

தமிழகத்திலேயே கோவில்கள் அதிகமாக இருக்கும் ஊர் புதுக்கோட்டை தான் அனைத்து கோவில்களையும் பராமரிக்க எங்களுக்கு நிதி பற்றாக்குறை உள்ளது அரசாங்கம் ஒதுக்கும் நிதி அனைத்து கோயில்களையும் பராமரிப்பு சிரமமாக இருக்கிறது. நந்தவனம் பகுதி மிகவும் அழகான பகுதி அதனை விரைவில் சீர் அமைப்போம் அதனை சீர் அமைப்பதற்கான பணியை விரைவில் எடுக்க இருக்கிறோம் மக்களும் வரலாற்றுச் சிறப்பான அப்பகுதியை அசத்த படுத்தாமல் இருப்பது முக்கியமானதது. என்று தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.