அறந்தாங்கி அருகே, அம்மாபட்டிணத்தில் குடியுரிமை சட்டத்தினை ரத்து செய்யக் கோரி தொடர்ந்து 26 நாள்களாக போராட்டம் நடந்துவருகிறது.
இந்நிலையில், அந்தத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களும் பெண்களும் திரண்டு கிழக்கு கடற்கரை சாலையில், அனைவரும் ஒன்று கூடி குடியுரிமை சட்ட நகல்களை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு, குடியுரிமை சட்டத்தினை ரத்து செய்யக்கோரி கோஷமிட்டனர்.
இப்போராட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இந்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மேலும், குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றினை மத்திய அரசு தவிர்க்க வேண்டும் என்ற கோஷங்கள் எழுப்பி தொடர் போராட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கைது - தஞ்சையில் ஆர்ப்பாட்டம்