ETV Bharat / state

பொன்னமராவதி கலவரம்; பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்திய 30 பேர் கைது!

புதுக்கோட்டை: பொன்னமராவதி கலவரத்தில் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய 30 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

File pic
author img

By

Published : May 31, 2019, 7:21 PM IST

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவாக பேசி வாட்ஸ் அப்பில் வெளியிட்டிருந்தனர். இதனால் அவதுறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அச்சமூகத்தை சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கலவரத்தில் ஈடுபட்டனர்.

அந்த கலவரத்தின்போது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தி சூறையாடினர். பொன்னமராவதி அண்ணாசாலை, பொன் புதுப்பட்டி, நாட்டுக்கல், பொன்னமராவதி பேருந்து நிலையம் என பல்வேறு பகுதிகளில் இருந்த கடைகளின் உடைமைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சேதப்படுத்தினர்.

இந்த கலவரம் தொடர்பாக ஆயிரம் பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அதில் ஒரு பகுதியாக பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய நபர்களை வீடியோ ஆதாரத்தின் பேரில் சுமார் 30 நபரை பொன்னமராவதி டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையிலான காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்தனர்.

பொன்னமராவதியில் கலவரம் ஏற்படுத்தி பொதுசொத்துக்களை சேதப்படுத்திய 30 பேர் நேற்று நள்ளிரவில் போலீசாரால் கைது.

 புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி  பொன்னமராவதியில் நடைபெற்ற கலவரத்தின்போது பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய 30 பேரை பொன்னமராவதி போலீசார் கைது செய்துள்ளனர்.
 பொன்னமராவதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவாக பேசி வாட்சப்பில் வெளியிட்டிருந்தனர். அது பொன்னமராவதியில் பெரிய அளவில் பாதிப்படைந்தது. இதனால் ஒரு சமூகத்தினரை இழிவாக பேசிய வாட்ஸ்அப் ஆடியோவால் பரபரப்பு நிலவியது. இதனால் சம்பந்தப்பட்ட அவதூறாக பரப்பிய ஆடியோவை வெளியிட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென  அந்த சமூகத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் போலீஸ் ஸ்டேசனை முற்றுக்கையிட்டு  கலவரத்தை ஏற்படுத்தினர். அந்த கலவரத்தின் வாயிலாக பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தி சூறையாடினர்.  இதில் பொன்னமராவதி அண்ணாசாலை, பொன் புதுப்பட்டி, நாட்டுக்கல், பொன்னமராவதி பேருந்து நிலையம் என பல்வேறு பகுதிகளில் இருந்த கடைகளின் உடமைகள்,  பேனர்கள், ஷேர்கள்,  பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சேதப்படுத்தினர். இந்த வழக்கில் சுமார் 1000 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதில் ஒரு கட்டமாக சேதப்படுத்திய நபர்களை வீடியோ ஆதாரத்தின் பேரில் சுமார் 30 நபரை நள்ளிரவில் கைது செய்துள்ளனர். பொன்னமராவதி டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.