ETV Bharat / state

அரசியல்வாதிகள் எங்கெங்கு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் என்பது தெரியும் - விக்கிரமராஜா

author img

By

Published : Mar 7, 2021, 4:01 PM IST

அரசியல்வாதிகள் எங்கெங்கு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் என்பது தெரியும் என விக்கிரமராஜா கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழக கட்டடத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வணிகர்களுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விக்கிரமராஜா, ‘தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள், அரசியல்வாதிகள் எங்கெங்கு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் என்பது தெரிந்தும்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அப்பாவி வணிகர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவது கண்டிக்கத்தக்கது. நடவடிக்கை எடுக்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதற்காக அரசியல் கட்சிகளின் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியாமல் அப்பாவி வியாபாரிகளை துன்புறுத்துகின்றனர்.

தேர்தல் அலுவலர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு சிறு குறு வணிகர்கள் கொண்டுவரும் நோக்கத்திற்கு ஆதாரங்கள் இருந்தும் அதனை பறிமுதல் செய்கின்றனர், இது கண்டிக்கத்தக்கது. உடனடியாக தேர்தல் ஆணையம் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இந்தப் பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதே நிலை தொடர்ந்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். இந்தப் பிரச்சினையானது வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும். சட்டப்பேரவைத் தேர்தலில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது குறித்து சென்னையில் வரும் 20ஆம் தேதி ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேர்தலில் போட்டியிடாது, ஆனால் எங்களிடம் ஒரு கோடிக்கு மேல் வாக்காளர்கள் வியாபாரிகள் ஆக உள்ளதால், அதனை தீர்மானிக்கும் சக்தியாக நாங்கள் உள்ளோம். வணிகர்களுக்கு என்று தனி வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அதிமுக திமுக ஆகிய கட்சி தலைவர்களிடம் மனுவாக அளித்துள்ளோம்.

தேர்தல் அறிக்கையில் எங்களுடைய கோரிக்கைகளை யார் பெறுகிறார்களோ அவர்களுக்கு எங்களது ஆதரவு இருக்கும். எனவே இதுகுறித்து ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் தான் முடிவு எடுக்க வேண்டும். அதுபோல மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு தங்களின் ஆதரவை தொடர்ந்து நீடிக்கும்.

விவசாயிகள் உற்பத்தியாளர்கள் நாங்கள். அதனை விற்பனை செய்யும் வியாபாரிகள் நாங்கள். எனவே நாங்கள் இருவரும் அண்ணன் தம்பிகள் போல் இருப்போம். இந்த விலைவாசி உயர்வுக்கு வணிகர்கள் காரணமல்ல.. ஆட்சியாளர்கள் தான் இதற்கு பொறுப்பு’ என்றார்.

இதையும் படிங்க: 'பாஜக- அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்’ அமித் ஷா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.