ETV Bharat / state

திருமணமாகவில்லை என சக ஆசிரியர்கள் கிண்டல்.. உடற்கல்வி ஆசிரியை தற்கொலை! - fellow teachers teased

புதுக்கோட்டையில் 40 வயதாகியும் திருமணம் ஆகவில்லை என சக ஆசிரியர்கள் கிண்டல் செய்த இரக்கமற்ற செயலால் உடற்கல்வி ஆசிரியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 13, 2023, 1:03 PM IST

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகரில் மாலையீடு, கேஎஸ்எம் நகரில் வசித்து வருபவர் மாணிக்கம். இவருக்கு மீனா என்ற மனைவியும், விஜயகுமார் என்ற ஒரு மகனும், ரேவதி, கீதா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். மகன் விஜயகுமார், மகள் கீதா இருவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இதில் ரேவதி(40) மட்டும் திருமணமாகாமல் கடந்த 10 வருடங்களாக புதுக்கோட்டை இராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக ரேவதியுடன் பணியாற்றும் சக ஆசிரியர்கள் 40 வயதாகியும், ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை எனக்கேட்டு, கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ரேவதி, வேலைக்குப் போக பிடிக்கவில்லை என பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். இதையெல்லாம் கண்டுகொள்ள வேண்டாம் என பெற்றோர்கள் ஆறுதல் கூறி வேலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த மன உளைச்சலில் ஆசிரியர் ரேவதி பள்ளிக்குச் செல்லாமல் ஒரு மாதம் லீவு போட்டு விட்டு வீட்டில் இருந்துள்ளார். அதன் பிறகு ஜனவரி மாதத்தில் மட்டும் இரண்டு நாட்கள் பணிக்கு சென்றுவிட்டு ரேவதி வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி காலை 9 மணி அளவில் இட்லி சாப்பிட்ட ரேவதி, சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார்.

ரேவதிக்கு உடல்நிலை சரியில்லை என நினைத்த அவரது பெற்றோர் ஆட்டோவில் அழைத்துச் சென்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பிறகு ரேவதியிடம் பெற்றோர் விசாரித்தபோது, எல்லோரும் ஏன் திருமணமாகவில்லை என கேட்டு கேலி கிண்டல் செய்வதாகவும், இதனால் தான் மன உலைச்சலில் இருப்பதாகவும், இதனால் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ந்து போன பெற்றோர் ரேவதியை மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் ரேவதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி காலை 6.05 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து ரேவதியின் தந்தை மாணிக்கம் தனது மகளின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் இன்று (பிப்.13) புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். 40 வயதாகியும் திருமணமாகவில்லை என சக ஆசிரியர்கள் கேலி கிண்டல் செய்ததால் ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மனிதநேயமற்றவர்களின் ஏளனப் பார்வையில் சிக்கிய இப்பெண்ணின் தற்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல
தற்கொலை எதற்கும் தீர்வல்ல

மேலும் தன்னைப் போன்று தான், மற்றவர்களும் என்ற மனப்பாங்கும், அவர்கள் வாழ்க்கையில் எந்த சூழ்நிலையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு, அவர்கள் வாழ்வதற்கு வழி செய்யவில்லை என்றாலும், மற்றவர்களை மதிக்கும் பண்பிற்கு மனிதர்கள் மாற வேண்டும். இந்த தற்கொலை சம்பவத்திற்கு காரணமான மனிதநேயமற்றவர்கள் மீது அரசு எடுக்கும் நடவடிக்கையே, அடுத்த சம்பவத்தை தடுக்கும் முற்றுப்புள்ளியாக அமையும் என்பது பலரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: "ஏலே நீ ஒரு Artist-னு நிரூபிச்சிட்டல" - பிரமிக்க வைத்த தென்காசி வீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.