ETV Bharat / state

'இடைக்கால பட்ஜெட்டில் நடைமுறைப்படுத்த முடியாத திட்டங்களை அறிவிக்காதீர்!'

author img

By

Published : Feb 24, 2021, 8:38 AM IST

புதுக்கோட்டை: இடைக்கால நிதிநிலை அறிக்கையில் நடைமுறைப்படுத்த முடியாத திட்டங்களை அறிவித்தால், அது தேர்தலுக்காக அறிவித்த மோசடித் திட்டமாகும் என திருநாவுக்கரசர் சாடினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர்
நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர்

புதுக்கோட்டையில், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் நேற்று (பிப். 23) திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குள்பட்ட வடவாளம், மூக்கம்பட்டி, சம்பட்டிவிடுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்திருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதேபோன்ற எல்லா மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியைக் கவிழ்த்துவருகிறது பாஜக. இது ஜனநாயகத்திற்கு, சட்டத்திற்கும் விரோதமான செயலாகும்.

காவிரி உபரிநீர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என்று எதிர்ப்பதற்கு கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு எந்தத் தார்மீக உரிமையும் கிடையாது. கடலில் வீணாகக் கலக்கக்கூடிய தண்ணீரை இதுபோன்ற திட்டங்களால்தான் சேமிக்க முடியும்.

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் தற்போது தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டதுபோல் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்கனவே செய்திருக்கலாம். காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தை நான் எதிர்க்கவில்லை.

ஆனால் தேர்தலுக்காகத் தொடங்கியதுபோல் உள்ளது. அதிமுக, பாஜக தவிர வேற எந்தக் கட்சியும் அந்தக் கூட்டணியில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் திமுக கூட்டணி வலுவாக உள்ளது.

ஏற்கனவே நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதுபோல சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும்.

இடைக்கால நிதிநிலை அறிக்கையில் நிறைவேற்ற முடியாத திட்டங்களை அறிவிக்கக் கூடாது. அப்படியே பல கோடிக்குத் திட்டங்களை அறிவித்தாலும் அதைத் தேர்தலுக்காக அறிவித்த மோசடித் திட்டமாகும்.

வருகின்ற 25ஆம் தேதி சென்னையில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அதன் பிறகுதான் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விவரம் தெரியவரும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'அரசியலுக்கு வரக்கோரி ரஜினிக்கு அழுத்தம் கொடுப்பது சரியல்ல' - திருநாவுக்கரசர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.