புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்திற்குள்பட்ட புல்வயல் ஊராட்சியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் தனது நான்கு வயதில், போலியோவால் பாதிக்கப்பட்டு கால்கள் செயலற்ற நிலையில் உள்ளார்.
இருந்தபோதிலும் எம்.ஏ., எம்.பி.ஏ. படித்துவிட்டு அதிமுகவில் இணைந்து செயலாற்றி பத்து வருடத்திற்கு முன்பு ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்தபோது புதுக்கோட்டையில் சிறந்த ஊராட்சி மன்ற உறுப்பினர் என்ற விருதினை மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெற்றுள்ளார்.
இது குறித்து ராமகிருஷ்ணன் கூறியதாவது:
எனக்கு நான்கு வயது இருக்கும்போதே போலியோவால் பாதிக்கப்பட்டு கால்கள் செயலிழந்துவிட்டன. இருந்தாலும் தன்னம்பிக்கையோடு படித்தேன். இதே ஊரில் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்து, மக்களுக்கு சேவை செய்வேன். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் ஒரு மணி நேரத்திற்கு முன்பே சென்றுவிடுவேன்.
என்னுடைய ஆர்வமும் தேவையும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்த முறையும் கண்டிப்பாக வெற்றிபெறுவேன். படிப்பதற்கும் மக்களுக்கு சேவை செய்வதற்கும் சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையாக நான் என்றுமே நினைப்பதே கிடையாது. தன்னம்பிக்கை மட்டும் இருந்தால் எதுவும் சாதிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மரக்கன்றுகள் நடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாற்றுத்திரனாளி!