புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவிற்கு உள்பட்ட வேங்கட குளம் கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கிவருகிறது. இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த கிராம பெண்கள், சிறுவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கூடாது என அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இரு தரப்பினரும் டாஸ்மாக் கடையின் முன்பு நடத்திய போராட்டம் தீவிரமடைந்து.
இந்த டாஸ்மாக் கடையால் ஊரில் உள்ள ஆண்கள் கெட்டு சீரழிந்து வருவதால் உடனே அதனை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்களும், சிறுவர்களும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், இந்த டாஸ்மாக்கடையை அகற்றினால் இந்த சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள், 25 கிலோ மீட்டர் தூரம் சென்று குடிக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுவிடும் என்றும், வெகுதூரம் குடிக்கச் செல்லும்போது விபத்துகள் ஏற்பட நேரிடும் என்றும் குடிமகன்கள் குமுறுகின்றனர்.
இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தியப் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்திற்கு விரைவில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: முகக்கவசத்துடன் பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்கள்