ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடந்த நான்கு மாத காலமாக நடைமுறையில் உள்ளது. இதில் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்ற பொதுமக்களுக்கு மின்சார வாரியம் அதிக மின் கட்டணம் வசூலித்துவருவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதனைக் கண்டிக்கும் வகையில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் நியாஸ் தலைமையில் நூதன முறையில், மின்சாரத் துறைக்கு வாய்ப்பாடு கற்றுக்கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதிக கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்தும், மின்சாரத்தைத் தடைசெய்யக் கூடாது, பொதுமக்கள் மீது மேலும் சுமையைத் திணிக்கக் கூடாது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பள்ளிச் சிறுமிகள், கரும்பலகையில் வாய்ப்பாடு எழுதி, அதனை வாசித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியைப் பின்பற்றினர்.
இதையும் படிங்க: 'விவசாயிகளுக்கு 15 மணி நேரம் மின்சாரம் வழங்கத் தயார்' - அமைச்சர் காமராஜ்