புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பாஜகவினரின் சாலை மறியல் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாகப் புதுக்கோட்டை அருகே விராலிமலை, திருச்சி, மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனைச்சாவடியில் பத்துக்கும் மேற்பட்ட பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து அரை மணி நேரத்திற்கு மேல் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விராலிமலை காவல்துறையினர் பாஜகவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தைக்கு பாஜகவினர் உடன்படாததால் பத்துக்கு மேற்பட்ட பாஜகவினரைக் கைது செய்தனர். கைதான பாஜகவினர் திமுக ஒழிக என்று கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பான சூழ்நிலையில் காணப்பட்டது.
இதையும் படிங்க:அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: அண்ணாமலை உள்பட பாஜகவினர் கைது