ETV Bharat / state

ஆதிமனிதர்களின் வாழ்விடமாய் திகழ்ந்த புதுக்கோட்டை நகரில் சீர்கெட்டுப்போன குளங்கள்

author img

By

Published : Oct 20, 2020, 11:00 PM IST

புதுக்கோட்டை: செழுமைக்கும், அனைத்து வளங்களுக்கும் பஞ்சம் இல்லாத ஒரு நாடாகவே இருந்த தொண்டைமான் நகரம், தற்போது கழிவுகளை சுமக்கும் குளங்களாய் மாறிவிட்டன.

pudukkottai

தமிழ்நாட்டில் சுதேச அரசுகளில் ஒன்றாக விளங்கிய புதுக்கோட்டை மாவட்டம், அரண்மனைகள், கோட்டைகள், குகை ஓவியங்கள் மற்றும் பல வரலாற்று நினைவுச் சின்னங்கள் உள்ளிட்ட பாரம்பரியத்தை கொண்டுள்ளது. ஆதிமனிதர்களின் வாழ்விடமாய் திகழ்ந்த இவ்வூர், பண்டைய தமிழ்ச் சங்க இலக்கியத்திலும் இடம்பெற்றுள்ளது.

பெயரும் புகழும் கொண்டிருந்தாலும், இதன் அழகே புதுக்கோட்டை நகரத்தைச் சுற்றி அமைந்திருக்கும் குளங்கள் தான். தமிழ்நாட்டிலேயே அதிக குளங்களைக் கொண்ட மாவட்டம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. நகர்ப் பகுதியில் மட்டுமே புதுக்குளம், பல்லவன் குளம், குமுதாங்குளம், ராஜாகுளம், பால்பண்ணை குளங்களைப் போன்று மொத்தம் 46 குளங்கள் உள்ளன. இவையனைத்தும் வரலாற்றில் மறக்க முடியாத நினைவுச்சின்னங்களாய் திகழ்கின்றன.

மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்த இந்த குளங்கள் இன்று கழிவு நீரின் இருப்பிடமாய் இருப்பதுதான் வேதனையளிக்கிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் மட்டும் பொறுப்பல்ல, பொதுமக்களும் சமூக அக்கறையின்றி தண்ணீரை மாசுபடுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். நகர்ப்புறத்திலுள்ள அனைத்து நீர்நிலைகளும் 80 விழுக்காடு கழிவு நீராக தான் தற்போது உருமாறி இருக்கிறது. 42 வார்டுகளில் 38 வார்டுகளுக்கு மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

கழிவைச் சுமக்கும் புதுக்கோட்டை குளங்கள்

இவை முழுமை பெறாததால் மழை மற்றும் வெயில் காலங்களில் அனைத்து கழிவு நீரும் குளங்களிலும், குடிதண்ணீரிலும் கலக்கின்றன. குறிப்பாக, மன்னர் காலத்திலேயே உருவாக்கப்பட்ட புதுக்குளம் நீர்நிலை, காட்டாறு பகுதியிலிருந்து வரும் தண்ணீரை சேகரித்து அன்றைய காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானம் முழுவதும் குடிநீரை வழங்கி வந்தது. நாளடைவில் காவிரி நீர் பாசனம் அமைத்த பிறகு இக்குளம் கேட்பாரற்றுக் கிடக்கிறது. மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் அசுத்தமும், துர்நாற்றமும் வீசும் அளவிற்கு சீர்கெட்டுக் கிடக்கிறது.

4 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட புதுக்குளத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் இதைச் சுற்றி நடைப்பயிற்சி செய்து வருகின்றனர். அதேபோன்று பல்லவன் குளம், கவிநாடு கண்மாய் நீர்நிலைகளும் மாசுபாட்டிற்கு குறைவில்லாமல் சீரழிந்து விட்டன. கழிவுநீர் தொட்டிகளின் எண்ணிக்கை மொத்தமாக 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கழிவுநீரும் சேரும் இடமாக புல்பண்ணைப் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் மொத்த கொள்ளளவு 16 எம்எல்டி. ஒரு நாளுக்கு 4 முதல் 5 எம்எல்டி அளவில் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு அருகில் உள்ள குளத்தில் விடப்படுகிறது. புதுக்கோட்டையில் மன்னர் காலத்திலிருந்தே கழிவு நீர் மூலம் விவசாயம் செய்யும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதனை நகராட்சி நிர்வாகமோ பொதுப்பணித் துறையோ, நீர் மேலாண்மைத் துறையோ கவனத்தில் ஏற்பதாக இல்லை.

கடந்த பத்து ஆண்டிற்கு முன்பு மக்களின் பயன்பாட்டில் இருந்த நீர்நிலைகள் தற்போது ஒன்றுக்கும் உதவாத நீர்நிலைகளாக கிடப்பது புதுக்கோட்டை மாவட்டத்தின் பேரிழப்பு என்றே கூறலாம்.

இதையும் படிங்க: அரை மணி நேரத்தில் முதியோர் உதவித் தொகை பெற ஆணை வழங்கிய ஆட்சியர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.