ETV Bharat / state

வெளிநாடு மாப்பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து கொடுக்கப்படும் பெண்களின் வாழ்க்கை பறிபோகிறதா? - புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை: வெளிநாடு மாப்பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து கொடுக்கப்படும் பெண்களின் வாழ்க்கைப் பறிபோகிறதா? இதுகுறித்து விளக்கமாக அலசுகிறது, இந்த சிறப்புக் கட்டுரைத் தொகுப்பு..!

வெளிநாடு மாப்பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொடுக்கப்படும் பெண்களின் நிலை

author img

By

Published : Oct 16, 2020, 7:51 PM IST

திருமணம் என்பது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தபெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். முன்பெல்லாம் எதிர்பார்ப்பின்றி 20 வயதிலேயே ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது ஆண்களுக்கு வாழ்க்கையை நடத்த தகுதி இருந்தால் மட்டுமே, பெண்வீட்டார் தங்களின் மகளை மணமுடிக்க ஒப்புதல் அளிக்கின்றனர். இதனால், கல்லூரி முடித்த உடனேயே ஆண்கள் சம்பாதிக்க ஓட ஆரம்பித்து விடுகின்றனர். குறிப்பாக, ஆண்களுக்கு வெளிநாடு சென்று சம்பாதித்தால் விரைவில் பணக்காரனாகிவிடலாம் என்ற எண்ணம் மனதில் ஆழமாகப்பதிந்து உள்ளது. எனவே, இளைஞர்கள் பலர் 20 வயதிலேயே சம்பாதிப்பதற்காக வெளிநாட்டுக்குச்சென்று விடுகின்றனர். மேலும் அவர்கள் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்று (NRI) அங்கேயே இருந்து விடுகின்றனர். தனது குடும்பம், உறவினர்கள் என அனைத்தையும் விட்டுவிட்டு அங்கு சென்று தனிமையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில், அவர்களது எண்ணங்கள் ஒரு வட்டத்திற்குள்ளேயே முடங்கிவிடுகிறது.

வெளிநாடு மாப்பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து கொடுக்கப்படும் பெண்களின் நிலை பற்றி வழக்கறிஞரின் கருத்து

ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுக்க பெற்றோர்கள் முதலில் கவனிப்பது ஆண்களின் வருமானம் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வசதியான வாழ்க்கை. சில பெண்களும் வெளிநாட்டு வாழ்க்கையா! என உடனே ஒப்புக்கொண்டு திருமணம் செய்துகொள்கின்றனர். அங்கு சென்ற பெண்களுக்கு மொழி, தனிமை ரீதியிலான பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் மன உளைச்சலும், இல்லற வாழ்க்கையில் கருத்து வேறுபாடும் ஏற்படத் தொடங்குகிறது.

வெளிநாடு மாப்பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து கொடுக்கப்படும் பெண்களின் நிலை பற்றி மனம் திறக்கும் சமூக ஆர்வலர்

மற்றொன்று திருமணம் செய்து மனைவியை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தம்பதிகளிடையே சந்தேகப் பிரச்னை தலைதூக்குகிறது. இப்படி இருப்பதால் திருமணம் என்பது தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.

தேசிய பெண்கள் நல ஆணையம் 2019 இல் வெளியிட்ட அறிக்கையில், "வெளிநாடு செல்லும் மணமானவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எதிராக 6,300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தாம்பத்திய உறவை மீட்டெடுத்தல், விவாகரத்து, வரதட்சனை கொடுமை, உடல்ரீதியான துன்புறுத்தல், திருமணத்தைத் தாண்டிய உறவினால் ஏற்படும் பிரச்னைகள் என இந்தியாவில் ஆண்டிற்கு 40,000 புகார்கள் வெளிநாடு செல்லும் திருமணமான ஆண்களுக்கு எதிராக வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 2019ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஆய்வில் இதுபோன்ற பிரச்னைகளில் பஞ்சாப் முதலிடமும், மகாராஷ்டிரா இரண்டாவது இடமும், ராஜஸ்தான் மூன்றாவது இடமும், தமிழ்நாடு நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. இதுகுறித்து 2018இல் உச்ச நீதிமன்ற பரிந்துரையின் மூலம், 2019இல் "The registration marriage of NRI bill 2019" என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியது. சமீபத்தில் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை கேட்கும் விதமாக நாடாளுமன்றம், சட்டமன்றம் மூலம் புதிய சட்டங்களை இயற்ற பரிந்துரைக்கப்பட்டுவருகிறது.

வெளிநாடு மாப்பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து கொடுக்கப்படும் பெண்களின் நிலை என்ன என்பது குறித்து வேதனையுடன் தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கருத்து

புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரையில், 50 விழுக்காடு குடும்ப வழக்குகள் NRI(Non-Resident Indian) மாப்பிள்ளைகளுக்கு எதிரானவையாக இருக்கின்றன என காவல் துறை தரப்பினரும், வழக்கறிஞர்களும் தெரிவிக்கின்றனர். அதிலும் குறிப்பாக மனைவி மீது சந்தேகம், வரதட்சணை கேட்டு உடல் ரீதியாக துன்புறுத்துவது என புதுக்கோட்டை மாவட்ட சமூக நலத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அதனால் பெற்றோர்கள் முதலில் சமுதாயத்தில் என்ன நடக்கிறது, என்ஆர்ஐ மாப்பிள்ளைகள் நல்லவர்களா? என்பதையெல்லாம் தெரிந்துகொண்டு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் அல்லது வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி திருமணம் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிலும் Matrimony போன்ற வலைதளங்களில் மாப்பிள்ளைகளை தேடுபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட வயது வரை வெளிநாடுகளில் சம்பாதித்துவிட்டுப்பிறகு சொந்த ஊருக்கே வந்து பிழைப்பு நடத்தும் எண்ணம் கொண்டவர்களையோ அல்லது பெண் குடும்பத்திற்கு நன்குதெரிந்த வெளிநாட்டு மாப்பிள்ளைகளையோ திருமணம் செய்தால் பிரச்னை குறையும் என்கின்றனர், சமூக ஆர்வலர்கள்.

இதையும் படிங்க: கரோனா ஊரடங்கால் தவிக்கும் பெண் ஆட்டோ ஓட்டுநர்: உதவி செய்யுமா அரசு?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.