ETV Bharat / state

தைலமரங்கள் நடுவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை - விவசாயிகள் மகிழ்ச்சி - புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

புதுக்கோட்டை: தைல மரங்களை நடுவதற்கு நீதிமன்றம் வாயிலாக இடைக்கால தடை வாங்கி வெற்றி பெற்ற விவசாயிகள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

இனிப்புகள் வழங்கி கொண்டாடும் விவசாய சங்கத்தினர்
author img

By

Published : Sep 18, 2019, 8:08 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக காடுகளை அழித்து தைல மரம் என அழைக்கப்படும் யூகலிப்டஸ் மரங்களை நட்டு சுமார் 75 ஆயிரம் ஏக்கர் நிலங்களை வீணாக்கி வந்தனர். யூகலிப்டஸ் மரங்களை வளர்ப்பதால் நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்பட்டு வெப்பம் வெளியிடப்படுவதால் அம்மரங்களின் பக்கத்தில் ஒரு புல்கூட முளைக்க முடியாத அளவிற்கு விஷத்தன்மை வாய்ந்தது.

எனவே இதனை தடை செய்யக்கோரி விவசாயிகள் மற்றும் பல்வேறு இயக்கங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுத்தும், போராட்டங்களை நடத்தியும் எந்த வித பயனும் இல்லாததால் புதுக்கோட்டை விவசாயிகள் சங்க செயலாளர் தனபதி , மணிகண்டன் உள்ளிட்ட விவசாயிகள் இணைந்து மதுரை மாவட்ட உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

இனிப்புகள் வழங்கி கொண்டாடும் விவசாய சங்கத்தினர்

வழக்கை விசாரித்த நீதிபதி தைலமரம் காடுகளால் ஏற்படும் தீமைகள் மற்றும் தைல மரத்தை பரிசோதனை செய்த ஆய்வு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் மூலம் அந்த மரங்கள் மண்ணிற்கு தீங்கு விளைவிப்பது என்று தெரியவந்துள்ளதால், இந்த வழக்கு முடியும் வரை யாரும் தைலமரங்களை நடக்கூடாது என இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் புதுக்கோட்டை மாவட்ட பேருந்து நிலையம் அருகே இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டனர்.

இதையும் படிங்க:புதுக்கோட்டை மாவட்டத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்!

Intro:தைல மர காடுகளுக்கு நீதிமன்றம் வாயிலாக இடைக்கால தடை வாங்கி வெற்றி பெற்ற விவசாயிகள்.. இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..

Body:புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக காடுகளை அழித்து தைல மரம் என அழைக்கப்படும் யூகலிப்டஸ் மரங்களை நட்டு சுமார் 75 ஆயிரம் ஏக்கர் நிலங்களை வீணாக்கி வந்தனர். யூகலிப்டஸ் மரங்களை வளர்ப்பதால் நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சப்பட்டு வெப்பம் வெளியிடப்படுவதால் அம்மரங்கள் பக்கத்தில் ஒரு புல் கூட முளைக்க முடியாத அளவிற்கு விஷத்தன்மை வாய்ந்தது. இதனை தடை செய்யக்கோரி விவசாயிகள் மற்றும் பல்வேறு இயக்கங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுத்தும் போராட்டங்களை நடத்தியும் எந்த வித பயனும் இல்லாததால் புதுக்கோட்டை விவசாயிகள் சங்க செயலாளர் தனபதி , மணிகண்டன் உள்ளிட்ட விவசாயிகள் இணைந்து மதுரை மாவட்ட உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி தைலமரம் காடுகளால் ஏற்படும் தீமைகள் மற்றும் தைல மரத்தை பரிசோதனை செய்த ஆய்வு அறிக்கையின் மூலம் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட தைல மரங்கள் மற்றும் இனிமேல் பயிரிட இருக்கும் தைலமரம் செடிகளையும் இந்த வழக்கு முடியும் வரை நடக்கூடாது என்று இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்தது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் புதுக்கோட்டை மாவட்ட பேருந்து நிலையம் அருகே இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் தனபதி கூறியதாவது,

தோட்டக்கலைத் துறை,வனத் துறை, வேளாண்மைத் துறை, நகராட்சி ஆணையர், என புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 அதிகாரிகளுக்கும் வழக்கு முழுமையாக முடியும் வரை தைல மரம் செடிகளை நட கூடாது என நீதிமன்றம் எச்சரிக்கை அறிவிப்பை அனுப்பியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஒருகாலத்தில் செழிப்பாக இருந்தது ஆனால் இந்த தைலமரம் காடுகளால் தற்போது நிலத்தடி நீர் வற்றி சூடான மற்றும் தூய்மையற்ற சுற்றுச்சூழலும் கெட்டுப்போன நிலங்களும் தான் மிச்சம் தைல மர காடுகள் அழிக்கப்படுவதால் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் . இந்த தயிரை மாறுபாடுகளால் புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது விவசாயமும் வீழ்ச்சி அடைந்து விட்டது பசுமையான காடுகளை அழித்து இப்படி கேடுவிளைவிக்கும் மரங்களை நட்டு இந்த அரசாங்கம் என்ன செய்யப் போகிறது ? ஏராளமான போராட்டங்கள் மனுக்கள் அனைத்தும் இந்த தளம் அரசுகளுக்கு எதிராக நாங்கள் செய்து எந்தவித பயனும் இல்லை அதனால்தான் நீதிமன்றத்தை நாடினோம் தைல மரங்களில் ஆய்வுக்குப் பின் வந்த முடிவுகளின் மூலம் தற்போது மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி இடைக்கால தடையை விதித்து தீர்ப்பளித்துள்ளார் விரைவில் இதன் முழு ஆய்வுக்கான முடிவும் சமர்ப்பிக்கப்பட்டு தைல மரங்களை முற்றிலும் அழிப்பதற்கான தீர்ப்பு விரைவில் கலங்குவார்கள் இதற்கான வழக்கில் அடுத்தடுத்து தொடுக்க இருக்கிறோம். விவசாயிகள் ஆகிய நாங்கள் இணைந்து இந்த வழக்கை சந்திக்க கஷ்டப்பட்டு இருக்கிறோம் அதற்கான பலனாகத்தான் இதைக் கருதுகிறோம் விரைவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தைல மரக் காடுகள் அழிக்கப்படும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை என்று தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.