புதுக்கோட்டை மாவட்டம் தேத்தாகுடி கிராம ஊராட்சிக்கு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவராக செல்வநாயகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்று பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து அப்பகுதி மக்கள் பிரச்னையான, பூண்டி அய்யனார் கோவிலுக்கு சாலை அமைக்கும் பணியை தொடங்கினார்.
இது அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செல்வநாயகம் தெரிவித்ததாவது, ”இன்று (அதாவது நேற்று) பதவியேற்றவுடன், இங்கு வந்து எனது முதல் பணியினை தொடங்கி இருக்கிறேன்.
இதுபோல் அடுத்தடுத்து மக்களின் தேவைகளை சரி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தலைவராக பதவியேற்று உள்ளேன். அடுத்தடுத்து அனைத்தையும் செய்வேன்” என்றார்.
இதையும் படிங்க: தொடரும் பைக் திருட்டால் வேலூரில் பரபரப்பு - சிசிடிவி காட்சிகள்!