புதுக்கோட்டை மாவட்டம் கடையக்குடியில் கட்டிட வேலை பார்த்துவிட்டு கொத்தனார், சித்தாள் என 15 பேர் மினி லாரியில் புதுக்கோட்டை நோக்கி வந்துகொண்டிருந்தனர். வாகனத்தின் பின் பக்கத்தில் கான்கிரீட் கலவை மிஷின் கட்டப்பட்டு அதுவும் மினி லாரிக்கு பின்னால் இழுத்து வரப்பட்டது.
வெள்ளாற்று பாலம் அருகே வந்துகொண்டிருந்தபோது மினி லாரியின் பின்பக்க டயர் திடீரென்று வெடித்தது. இதனால் நிலை தடுமாறி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், லாரியில் இருந்து தூக்கி வீசப்பட்ட இன்பம் என்ற 40 வயது பெண் பின்னால் கட்டப்பட்டிருந்த கான்கிரீட் கலவை மிஷினில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரியில் வந்த 14 பேர் பலத்த காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இருவரின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க... மாணவரைத் தாக்கிய ஆசிரியர் - நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை!