ETV Bharat / state

வசூலான ரூ.4 கோடி மொய் பணமும்.... மாட்டிக்கொண்ட திருடனும்...! - Vadakadu Moi Virunthu

புதுக்கோட்டை: வடகாடு கிராமத்தில் நடந்த மொய் விருந்தில் வசூலான ரூ.4 கோடியை  இளைஞர் ஒருவர் திருட வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

pudukkottai
author img

By

Published : Jul 29, 2019, 12:02 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் அங்குள்ள மாரியம்மன் கோயில் மண்டபத்தில் துப்பாக்கி பாதுகாப்புடன் மொய்விருந்து நடத்தினார். அந்த மொய் விருந்தில் ரூ.4 கோடி வரை மொய்ப் பணம் வசூலானது.

இந்நிலையில், ஜூலை 26ஆம் தேதி நள்ளிரவில் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டுக்குள் இருந்து வெளியே ஒருவர் பாய்ந்தோடி அருகிலிருந்த சோளக்கொல்லைக்குள் ஓடி மறைந்துள்ளார்.

புதுக்கோட்டை
மொய் விருந்தில் வசூலான பணம்

அதைப் பார்த்த கிருஷ்ணமூர்த்தி 'திருடன் திருடன்' என சத்தம்போட்டதால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து சோளக்கொல்லைக்குள் மறைந்திருந்த திருடனை மடக்கிப் பிடித்தனர்.

அவனைப்பிடித்து விசாரித்தபோது வடகாட்டை அடுத்த அணவயல் கிராமத்தைச் சேர்ந்த சிவநேசன் (24) என்பது தெரியவந்தது. மேலும், அவன் கடந்த சில ஆண்டுகளாக திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகவும், கிருஷ்ணமூர்த்தியின் மொய் விருந்து பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டதாலும் மொய்ப்பணத்தை அவர் செலவு செய்வதற்குள் கொள்ளையடித்துச் சென்று விட வேண்டும் என்று திட்டமிட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, உடனடியாக வடகாடு காவல் நிலையத்தில் சிவநேசன் ஒப்படைக்கப்பட்டான். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆலங்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் அவனை ஆஜர்படுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:மொய் விருந்தில் வசூலான 4 கோடியை திருட வந்த நபர் கைது..Body:புதுக்கோட்டை அருகே மொய்ப் பணத்தை திருட வந்த வாலிபர் கைது.
                                    
         புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த வடகாடு என்ற கிராமத்தில் நடந்த மொய்விருந்துப் பணத்தை வீட்டில் வைத்திருந்ததை மோப்பம் பிடித்த வாலிபர் ஒருவர் திருட வந்தபோது மாட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
         வடகாட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் அங்குள்ள மாரியம்மன் கோவில் மண்டபத்தில் தனித்தேவையாக மொய்விருந்து நடத்தினார். அவரது மொய் விருந்தில் 4 கோடி ரூபாய் மொய் வந்திருந்தது.
         இந்நிலையில் 26-ஆம் தேதி நள்ளிரவில் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் மின்சாரம் தடைபட்டிருக்கிறது. அதனால் புழுக்கம் தாங்காத கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்குள் இருந்து வெளியே வந்திருக்கிறார். அப்போது அவரது வீட்டு போர்டிகோவில் இருந்து ஒருவர் பாய்ந்தோடி அருகிலிருந்த சோளக்கொல்லைக்குள் சென்று மறைந்து விட்டார்.
         அதைப் பார்த்த கிருஷ்ணமூர்த்தி திருடன் திருடன் என சத்தம்போட்டதால் அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து தேடியபோது சோளக்கொல்லைக்குள் இருந்த திருடன் சிக்கிக் கொண்டான். அவனைப்பிடித்து விசாரித்தபோது அவன் வடகாட்டை அடுத்த அணவயல் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரது மகன் சிவனேசன்(24) என்பது தெரிய வந்தது.
         மேலும் சிவனேசன் கடந்த சில ஆண்டுகளாக திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்ததாகவும் கிருஷ்ணமூர்த்தியின் மொய் விருந்து பற்றி ஏற்கனவே கேள்விப் பட்டதாலும் மொய்ப்பணத்தை அவர் செலவு செய்வதற்குள் கொள்ளையடித்துச் சென்று விட வேண்டும் என்று திட்டமிட்டு வந்ததாகவும் தெரிவித்திருக்கிறான்.
         ஊடனடியாக வடகாடு காவல் நிலையத்தில் சிவனேசன் ஒப்படைக்கப்பட்டான். விசாரித்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ஆலங்குடி குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்;பை ஏற்படுத்தியிருக்கிறது.
                                                      
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.