புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் ஆவுடையார் கோயில், மணமேல்குடி ஆகிய தாலுகா பகுதிகளில் வருவாய்துறை அலுவலர்களும், காவல்துறையினர்களும் தொடர்ந்து ஆற்றுப்படுகையில் மணல் கடத்தப்படுவதை ஆய்வு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஆவுடையார் கோயில் அருகே உள்ள பெருநாவலூர் கிராமத்தை ஒட்டிய ஆற்றுப்படுகையில், மாட்டு வண்டியில் மணல் கடத்தப்படுவதாக ஆவுடையார் கோயில் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் உதவி ஆய்வாளார் ரவிச்சந்திரனுடன் மற்ற காவலர்கள் பெருநாவலூர் கிராமப் பகுதியில் ரோந்து சென்றபோது, அந்த பகுதியில் மணல் கடத்த பயன்படுத்திய ஐந்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் வேறு யாரேனும் மணல் கடத்தல் வேலையில் ஈடுபட்டு வருகிறார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பால் வண்டியில் மணல் கடத்தல் - போலீசாரிடமிருந்து தப்பிக்க தற்கொலை முயற்சி