புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 24 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மூன்றடுக்கு கட்டடத்தில் தற்போது கோவிட் 19 சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள வார்டுகள் யோகா மையம் போன்றவற்றை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 2 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் 2000 படுக்கைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இன்று திறக்கப்பட்டுள்ள கோவிட் 19 சிறப்பு மருத்துவமனையில் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு நிகரான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வார்டுகளிலும் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் இரண்டு தனியார் மருத்துவமனை நிர்வாகம் கோவிட் 19 சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளது. புதுக்கோட்டையில் சித்தா சிகிச்சை சிறப்பான முறையில் அளிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.
இதையும் படிங்க: கூட்டுறவுத் துறையில் யார் தவறு செய்தாலும் தப்பமுடியாது' - அமைச்சர் செல்லூர் ராஜு