ETV Bharat / state

'தினக்கூலியான ரூ.400ஐ உடனடியாக வழங்க வேண்டும்'- மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் வலியுறுத்தல்! - மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை : மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களின் தினக் கூலியான 400 ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

EB Contract workers
மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Oct 20, 2020, 4:56 PM IST

தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மின்சார வாரிய அலுவலகம் முன்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரவடிவேலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், "மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உடனடியாக போனஸ் வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களின் தினக் கூலியான 400 ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்" என வலியுறுத்தப்பட்டது.

மேலும், ஒப்பந்த தொழிலாளர்களிடம் சர்வாதிகாரமாக நடந்துகொள்ளும் மின் வாரிய அலுவலர்களையும் வன்மையாக கண்டித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இது குறித்து தொழிலாளர்கள் கூறியதாவது, "தங்களது கோரிக்கைகளை 15 வருடங்களாக முன்வைத்து வருகிறோம். ஆனால், எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. விரைவில் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் இல்லையென்றால் சென்னையில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்" எனத் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.