புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின், கரோனா சிறப்பு பிரிவில் 600க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் ஆய்வு செய்து கொண்டிருந்த புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் முத்துராஜா கரோனா நோய்த் தொற்றிற்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து கொண்டிருந்தார்.
அப்போது, கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு திடீரென்று இருதயக் கோளாறு ஏற்பட்டது, தகவலறிந்த சட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா உடனடியாக PPE கிட் அணிந்து உள்ளே சென்று நோயாளிக்கு முதலுதவி சிகிச்சையளித்தார். பின்னர் மருத்துவர்களிடம் அவருக்கு கொடுக்க வேண்டிய மேல் சிகிச்சை முறை குறித்தும் அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது பாதிக்கப்பட்ட நோயாளிக்கு சட்டப்பேரவை உறுப்பினரே சிகிச்சை அளித்த சம்பவம் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'பிஞ்சு உள்ளங்களின் பெருங்கருணைக்கு அன்புப் பரிசு' - நெகிழ்ச்சியில் ஸ்டாலின்