ETV Bharat / state

புதுக்கோட்டையில் அமையவிருக்கும் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் - minister vijaya basker laid foundation to Pudukottai hifi park

புதுக்கோட்டை: நகர்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.9.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள புதிய பூங்காவிற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அடிக்கல் நாட்டினார்.

புதுக்கோட்டையில் ரூ.9.15 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள புதிய பூங்காவிற்கு அமைச்சர் அடிக்கல்!

author img

By

Published : Jul 11, 2020, 4:53 PM IST

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று (ஜூலை 11) புதுக்கோட்டை நகராட்சி தற்காலிக பேருந்து நிலைய மைதானத்தில் அமையவுள்ள புதிய பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி பணியினைத் தொடங்கிவைத்தார். இந்நிகழ்வு மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தலைமையில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே. வைரமுத்து முன்னிலையில் நடைபெற்றது.

பின்னர் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், “தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மேலும், பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் புதுக்கோட்டை நகராட்சியில் சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துதல் போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதன்படி, புதுக்கோட்டை நகராட்சி தற்காலிக பேருந்து நிலைய மைதானத்தில் நகராட்சி நிர்வாகத்தின் மூலம், ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.9.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள புதிய பூங்காவிற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டு பணி தொடங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் ரூ.9.15 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள புதிய பூங்காவிற்கு அமைச்சர் அடிக்கல்!

இப்பூங்கா ஐந்து ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது. இப்பூங்காவில் நடைபயிற்சி பாதை, சைக்கிள் டிராக், ஆண், பெண், முதியோர்களுக்கான உடற்பயிற்சிக் கூடங்கள், இசை நீருற்று போன்ற வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது. இதேபோன்று மாற்றுத்திறனாளிகளுக்கான பூங்கா, அறிவியல், கணித, பலவகையான விளையாட்டுக் கூடம், ஸ்கேட்டிங் பயிற்சி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வைஃபை ப்ரீ, திறந்தவெளி கலையரங்கம், யோகா பயிற்சி மேடை, புற்களாலான விலங்குகள் உருவம், உயர்மின் கோபுர விளக்கு, கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு அனைத்து வசதிகளுடன் கூடிய மாபெரும் பூங்காவாக அமைக்கப்படவுள்ளது.

மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அந்தவகையில், பொதுமக்கள் கரோனா தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் முகக்கவசம் அணிதல், தகுந்ந்த இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைகளை அடிக்கடி சோப்புப் போட்டு கழுவுதல் போன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாது பின்பற்றி தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க...சாத்தான்குளம் வழக்கு: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.