ETV Bharat / state

"ஹிட்லருக்கு சிலை வைப்பார் சீமான்" - சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சாடல்! - SEEMAN

சீமான் ஹிட்லருக்கே சிலை வைப்பார் போல. மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்கிற சர்வாதிகாரத்துக்கு வக்காலத்து வாங்கும் யார் பேச்சையும் மக்கள் கேட்க மாட்டார்கள் என்று சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சீமானை விமர்சனம் செய்துள்ளார்.

சீமானை விமர்சித்த கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன் மற்றும் சீமான் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2024, 10:48 PM IST

சென்னை: மறைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவின் முதலாமாண்டு நினைவு அஞ்சலியையொட்டி சென்னை தியாராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் சங்கரய்யாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனை அடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு நடைபெற உள்ள நிலையில், மாநாட்டு லட்சினை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், "கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கட்சியின் மாநிலக் குழு கூட்டமும் நடைபெற உள்ளது. வரும் ஜனவரி 3,4,5 ஆகிய தேதிகளில் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற உள்ளது. அந்த மாநாட்டுக்கான லட்சினையை வெளியிடும் நிகழ்வும் இன்று நடைபெற்றது.

அந்த மாநில மாநாட்டில் மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள், அனைத்து துறைகளிலும் இருக்கும் காலி பணியிடங்கள், காலிப் பணியிடங்களை வெளி முகமைகள் மூலம் நிரப்புவது, இளைஞர்களின் வாழ்வு கேள்விக்குறியாக இருப்பது, வியாபாரிகள், விவசாயிகள் என அனைத்து மக்களின் வாழ்வும் நொறுங்கிப் போய் கிடப்பது, இதற்கு அனைத்திற்கும் அடிப்படையாக இருக்கும் மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கை, அவர்களின் மதவெறிக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் ஆகியவை பற்றியும் மாநாட்டில் பேச இருக்கிறோம்.

இதையும் படிங்க: "காமராஜர், நேரு போன்றவர்கள் சர்வாதிகாரிகள்" - சீமான் பேட்டி..!

அதேபோல, தமிழ்நாட்டில் மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஒரு ஆய்வினை மேற்கொண்டு அது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றியும் அந்த மாநாட்டில் விவாதிக்க இருக்கிறோம்.

விழுப்புரத்தில் 3ஆம் தேதி நடைபெறும் பிரம்மாண்ட பேரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. சிலர் மாநில அரசு நடத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், சட்டப்படி பார்த்தால் மத்திய அரசுதான் முறைப்படி செய்ய முடியும்" என்று கூறினார்.

மேலும் அதன் தொடர்ச்சியாக, நேர்மையாளன் சர்வதிகாரியாகவே இருப்பான் என சீமான் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "காலையில் எழுந்தவுடன் என்ன எல்லாம் தோன்றுகிறதோ அதை பேசுபவர் தான் சீமான். சீமான் ஹிட்லருக்கே சிலை வைப்பார் போல. மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்கிற சர்வாதிகாரத்துக்கு வக்காலத்து வாங்கும் யார் பேச்சையும் மக்கள் கேட்க மாட்டார்கள்.

அதேபோல, பாசிசத்தை கிண்டல் செய்தும் சிலர் பேசுகிறார்கள். பாசிசம், சர்வாதிகாரம் இரண்டையும் எதிர்த்து தான் உலக மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். சர்வாதிகாரத்துக்கு, பாசிசத்துக்கு ஆதரவாக பேசும் எந்த பேச்சையும் மக்கள் கேட்க மாட்டார்கள்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.