புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தமிழக அரசு சார்பில் தொடங்கப்படும் மூன்றாவது பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை, நேற்று (நவ.15) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
அதேநேரம், புதுக்கோட்டையில் நடந்த பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை திறப்பு விழாவில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
இன்று புதுக்கோட்டையில் மாண்புமிகு தமிழ் நாட்டின் முதல்வர் அவர்களால் புதிய பல் மருத்துவ கல்லூரி மற்றும் 28 மருத்துவத்துறை கட்டிடங்கள் திறப்பு விழா மிக சிறப்பாக நடைபெற்றது... pic.twitter.com/ITA0OUOaRx
— Subramanian.Ma (@Subramanian_ma) November 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">இன்று புதுக்கோட்டையில் மாண்புமிகு தமிழ் நாட்டின் முதல்வர் அவர்களால் புதிய பல் மருத்துவ கல்லூரி மற்றும் 28 மருத்துவத்துறை கட்டிடங்கள் திறப்பு விழா மிக சிறப்பாக நடைபெற்றது... pic.twitter.com/ITA0OUOaRx
— Subramanian.Ma (@Subramanian_ma) November 15, 2023இன்று புதுக்கோட்டையில் மாண்புமிகு தமிழ் நாட்டின் முதல்வர் அவர்களால் புதிய பல் மருத்துவ கல்லூரி மற்றும் 28 மருத்துவத்துறை கட்டிடங்கள் திறப்பு விழா மிக சிறப்பாக நடைபெற்றது... pic.twitter.com/ITA0OUOaRx
— Subramanian.Ma (@Subramanian_ma) November 15, 2023
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியதாவது, “முன்னாள் முதலமைச்சர் என்னவென்று தெரியாமல் பேசுகிறார். எதையும் தெரிந்து கொள்ளாமல் அறிக்கை விடுகிறார். எதிர்கட்சித் தலைவர் என்பது பொறுப்பான பொறுப்பாகும். ஆனால், அவர் இது போன்று செயல்படுவது அவரின் அறியாமையையும், நிர்வாகத் திறமையின்மையையும் காட்டுகிறது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் 120 மருத்துவமனைகள், எச்.ஆர் என்ற மருத்துவப் பணிகள் உருவாக்காமல் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அவ்வாறு தரம் உயர்த்தினால், தரம் உயர்த்தப்பட்டதாக அர்த்தம் இல்லை. பெயர் பலகை மட்டுமே மாட்டிக்கொள்ள முடியும். மருத்துவமனை தரம் உயர்த்தி விட்டு, இரண்டரை ஆண்டுகளாக மருத்துவர்களை தற்போதைய ஆட்சியாளர்கள் நியமிக்கவில்லை என்ற தவறான தகவலை, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
டி.என்.பி.எஸ்.சியில் 10,250 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், மருத்துவத் துறையில் காலியாக இருந்த டைப்பிஸ்ட், ஓஏ உள்ளிட்ட 986 பணியிடங்கள் நிரப்பப்பட்டு, அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பணி நியமன ஆணையை வழங்கினார். மேலும், மருத்துவத் துறையில் தொடர்ந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூபாய் 67.83கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ரூபாய் 8.89கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பொது சுகாதாரத்துறை… pic.twitter.com/DTY94IlfjM
— Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்) (@SMeyyanathan) November 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூபாய் 67.83கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ரூபாய் 8.89கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பொது சுகாதாரத்துறை… pic.twitter.com/DTY94IlfjM
— Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்) (@SMeyyanathan) November 15, 2023தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூபாய் 67.83கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ரூபாய் 8.89கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பொது சுகாதாரத்துறை… pic.twitter.com/DTY94IlfjM
— Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்) (@SMeyyanathan) November 15, 2023
எம்.ஆர்.பி மூலம் மருத்துவத் துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பும் விவகாரத்தில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டதால், தற்பொழுது அந்த வழக்குகள் முடிவுக்கு வந்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
விரைவில் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கின்றோம். தீர்ப்பு வந்துவிட்டால், உடனடியாக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “சென்னைக்கும், சேலத்திற்கும் செல்லும் எடப்பாடி பழனிசாமி, செல்லும் வழியில் உள்ள சுகாதார நிலையங்களுக்குச் சென்று, பாம்பு கடி, நாய்க்கடி மருந்துகள் இருக்கிறதா, அது எவ்வளவு நாட்களுக்கு இருக்கிறது என்று தெரிந்து கொண்டு, தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை வளர்ச்சியைப் பற்றி தெரிந்து கொள்ளட்டும்.
மேலும், போலி மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட மூன்று மருத்துவமனைகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. போலி மருத்துவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்று கவனத்தில் கொண்டு வரும் பொழுது, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சுகாதாரமற்ற முறையில், ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்ட கேண்டீன்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது போன்று தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனை வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் உள்ள உணவகங்களில் உணவுத்துறை மூலம் ஆய்வு செய்யப்பட்டு, தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: ரூ.2500 செலவில் செயற்கைக்கோள் உருவாக்கி அசத்தல்.. கரூர் மாணவனின் கனவு நனவானது எப்படி?