புதுக்கோட்டை மாவட்டம், காந்தி சிலை அருகே நகர காவல் துறை, ரோட்டரி சங்கம் சார்பில் முகக்கவசம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கினார். மேலும் முகாமில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், கிருமி நாசினி மருந்துகளை எவ்வாறு பயன்படுத்துவது, நீர் ஆவி பிடிக்கும் கருவி மூலம் எவ்வாறு நீராவிப் பிடிப்பது என்பது குறித்து செய்து காண்பிக்கப்பட்டது.
அப்போது நகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் செந்தில் குமார், நகராட்சி ஆணையர் ஜஹாங்கிர் பாஷா, நகர துணை ஆய்வாளர் பிரகாஷ், ரோட்டரி சங்க நிர்வாகிகள், காவல் துறையினர், நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பொதுமக்களிடம் தெரிவித்ததாவது, "கரோனா வைரஸ் என்பது ஒரு கொடிய தொற்று.
இந்த பாதிப்பு ஏற்பட்டு காவலர் ஒருவர் உயிரிழந்த பொழுது, அவருடைய குடும்பம் கூட அவரைப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே அனைவரும் முகக்கவசம் அணிந்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாமக்கல்லில் கரோனா விழிப்புணர்வு!