புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள ஏம்பல் கிராமத்தில் வசித்து வருபவர் நாகூரான், இவரது மகள் ஜெயபிரியா (7). இந்தச் சிறுமி நேற்று முன்தினம் ( ஜூன் 30) மாயமானார். இதையடுத்து நாகூரான் ஏம்பல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில் நேற்று( ஜூலை 1) மாலை அப்பகுதியிலுள்ள கிளவிதம் ஊரணி பகுதியில் சிறுமி ஜெயபிரியா இறந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சிறுமியின் உடலத்தை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
இதனையடுத்து சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரர் வியாபாரியான ராஜா(29) என்பவரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் சிறுமியை அப்பகுதி வழியே செல்லும் பொழுது அவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்ததும், சிறுமி கத்தி கூச்சலிட்டதால் அடித்துக் கொன்றதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதனடிப்படையில் குற்றவாளியை கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் அந்த சிறுமியின் உறவினர்கள் சிறுமியின் இழப்புக்கு காரணமானவரை உடனடியாக தண்டிக்க வேண்டும் எனவும்
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த குற்றவாளி கைது - சிறுமி பாலியல் வன்புணர்வு
புதுக்கோட்டை: அறந்தாங்கியில் காணாமல் போன சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த குற்றவாளியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.