புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கிளிக்குடி அருகே உள்ள மாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதி (30). இவர் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி இவர் வீட்டுக்கு அருகே உள்ள 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், பாரதி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இன்று (டிசம்பர்.10) நீதிபதி சத்யா பாலியல் வன்கொடுமை செய்த பாரதிக்கு இரண்டு பிரிவின்கீழ் தலா 5 ஆண்டு கால சிறை தண்டனை விதித்தும், 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒன்பது மாத காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பாரதியை திருச்சி சிறைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.