புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் திருக்கோயிலில் மாசிமகத் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்தக் கோயிலில் உள்ள குதிரை சிலை ஆசியாவிலேயே மிக உயரமான சிலை என்று அழைக்கப்படுகிறது.
37 அடி கொண்ட இந்தக் குதிரை சிலைக்கு நேர்த்திக்கடன் செய்பவர்கள் 37 அடி நீளம் கொண்ட காகிதப்பூ மாலை அணிவது தனிச்சிறப்பாகும். புதுக்கோட்டை மட்டுமல்லாது தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் குதிரைக்கு மாலை அணிவிப்பார்கள்.
நீளமான மாலை என்பதால், பக்தர்கள் வாகனத்தில் எடுத்துவந்து அணிவிப்பார்கள். அதன்படி இந்தாண்டு குதிரை சிலைக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காகித மாலைகள் அணிவிக்கப்பட்டன. மிகவும் பிரசித்தி பெற்ற இத்திருவிழாவில் எண்ணற்ற பக்தர்கள் வருகைதருவார்கள் என்பதால் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டது.
இதையும் படிங்க: பிளாஸ்டிக் தடை: ஜிகினாவுக்குப் பதிலாக காகிதப் பூ மாலை தயாரிக்கும் பணிகள் தீவிரம்