ETV Bharat / state

தமிழ்நாடு அரசை கண்டித்து மீனவர்கள் சாலை மறியல் - மீனவர்களை மீட்க முயற்சிகள் எடுக்காத அரசு

மாயமான மீனவர்கள் குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்காத அலுவலர்களை கண்டித்தும், மீனவர்களை மீட்க முயற்சிகள் எடுக்காத அரசை கண்டித்தும் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Kottaipattinam fishermen block road condemning the government

author img

By

Published : Jan 21, 2021, 12:34 PM IST

புதுக்கோட்டை: ஜனவரி 18ஆம் தேதி கோட்டைப்பட்டினத்தில் இருந்து 214 விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். 19ஆம் தேதி காலை 213 விசைப்படகுகள் கரை திரும்பிய நிலையில் ஆரோக்கிய ஜேசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகும், அதில் பயணித்த மெசியா, நாகராஜ், சாம்சன், செந்தில்குமார் ஆகிய நான்கு மீனவர்களும் கரை திரும்பவில்லை.

இது தொடர்பாக கரை திரும்பிய மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினர் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் விசைப்படகுகளை துரத்தி, ஒரு படகை இடித்து தண்ணீரில் மூழ்கடித்தனர். இதில் படகில் இருந்த நான்கு மீனவர்களும் தண்ணீரில் மூழ்கினர். மற்ற மீனவர்கள் இலங்கை கடற்படையினருக்கு பயந்து திரும்பி விட்டனர் என்றனர்.

இந்நிலையில், மாயமான மீனவர்கள் குறித்த எந்த தகவலும் வெளிவராத சூழலில் 19ஆம் தேதி கோட்டை பட்டினத்திலிருந்து மூன்று விசைப்படகுகளில் 12 மீனவர்கள், மாயமான மீனவர்களை தேடி கடலுக்குச் சென்றனர். இந்திய எல்லைக்கு சென்ற நிலையில் அவர்களை தடுத்து நிறுத்திய இலங்கை கடற்படையினர் நான்கு மீனவர்களும் பத்திரமாக இருப்பதாகவும், நீங்கள் திரும்பிச் செல்லுங்கள் என்று அனுப்பி விட்டதாகவும் கூறியதாகத் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், மீனவர்கள் குறித்த எந்தத் தகவலும் வராததால் 20ஆம் தேதி காலை மீண்டும் மூன்று விசைப்படகில் 15 மீனவர்கள் கோட்டைப்பட்டினத்திலிருந்து மாயமான மீனவர்களைத் தேடி சென்றனர். 20ஆம் தேதியும் அவர்களை எல்லைக்கோடு அருகே தடுத்து நிறுத்திய இலங்கை கடற்படையினர், மீனவர்களை தேடுவதற்கு புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றும், தொடர்ந்து தவறான தகவலை பதிவு செய்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

மாலை 4 மணிவரை இந்திய எல்லையில் காத்திருந்து மீண்டும் மீனவர்கள் பின்னர் கரை திரும்பினர். இந்நிலையில், நேற்றிரவு மாயமான மீனவர்களில் செந்தில்குமார், சாம்சன் ஆகிய இருவரது உடல்கள் மீட்கப்பட்டதாக புகைப்படம் வெளிவந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

தொடர்ந்து அலுவலர்களிடமிருந்து சரியான தகவல் கிடைக்கவில்லை. மாயமான மீனவர்களை மீட்பதற்காக முழுவீச்சில் அரசு செயல்படவில்லை என்றும் குற்றச்சாட்டை முன் வைக்கின்றார்கள். இதற்கிடையில், இன்று காலை முதல் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள மக்கள் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல் துறையினரும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.