ETV Bharat / state

புதுக்கோட்டை அரசு அதிகாரிகள் மாஜி அமைச்சருக்கு விஸ்வாசம்.. திமுக நிர்வாகியின் புகார் அமைச்சர் ரகுபதி அப்செட்! - dmk executives

DMK Executives: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு விஸ்வாசமாக இருப்பதாக திமுக வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கவிச்சுடர் கவிதைப்பித்தன் கூறியுள்ளார்.

திமுக நிர்வாகிகள் மீது கவிதைப்பித்தன் காட்டம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 10:12 PM IST

புதுக்கோட்டை: திமுக வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் புதுக்கோட்டை மாலையீடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (அக்.09) நடைபெற்றது. முதலாவதாக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டச் செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி தலைமையில் நடைபெற்றது.

இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அவைத்தலைவர் அரு.வீரமணி தலைமையில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் அனைவரையும் வரவேற்று ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி பார்வையாளரும், முன்னாள் அமைச்சருமான கடலாடி சத்தியமூர்த்தி, விராலிமலை சட்டமன்ற தொகுதி பார்வையாளரும், தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயருமான அஞ்சுகம் பூபதி, புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி பார்வையாளர் கார்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில இலக்கிய அணி துணை தலைவருமான கவிச்சுடர் கவிதைப்பித்தன் ஆகியோர் ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில், வரும் அக்.14ஆம் தேதி சென்னையில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில், இந்தியா கூட்டணி அங்கம் வகிக்கும் பெண் தலைவர்கள் பங்கேற்கும் மகளிர் அணி மாநாட்டில், புதுக்கோட்டை மாவட்டதிலிருந்து ஏராளமான மகளிர் அணியினர் பங்கேற்பது, கூட்டுறவு சங்கங்களில் உடனடியாக புதிய உறுப்பினர்களை சேர்த்து, அவர்களும் அந்த கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற உடனடியாக ஏற்பாடு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து, வரும் டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணி 2வது மாநில மாநாட்டில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தொகுதிக்கு 2 ஆயிரம் பேர் வீதம் 12 ஆயிரம் இளைஞர் அணியினர் சீருடையோடு பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அப்போது பேசிய புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்வ பாண்டியன், “திமுகவினர் எந்தவித ஒழுங்கீன நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபடுபவர்கள் மீது திமுக தலைவர், நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்ட மாட்டார். ஏனென்றால் அவருக்கு தெரியாமல் இங்கே எதுவும் நடப்பதில்லை. அவர் அனைத்தையும் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்” என்று பேசினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில இலக்கிய அணி துணை தலைவருமான கவிச்சுடர் கவிதைப்பித்தன், “புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரை ஒரு சில திமுகவினர், அதிமுக முன்னாள் அமைச்சரான விஜயபாஸ்கருடன் மிக நெருக்கமாக இருக்கின்றீர்கள். அவர்கள் தங்களது பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

உங்களது நடவடிக்கையால் கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தாதீர்கள். உங்களால் கட்சிக்கு உண்மையாக இருக்கக்கூடிய விசுவாசிகளுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. அவ்வாறு அவருடன் நெருக்கமாக இருக்கும் நீங்கள் நாளை ஒரு வேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், திமுகவை விட்டு அதிமுகவிற்கு செல்ல மாட்டீர்கள் என்று எழுதிக் கொடுங்கள். அவ்வாறு நீங்கள் மாறாமல் இருந்தால் நான் இந்த திமுகவில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுகிறேன்.

கிட்டத்தட்ட திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும், அலுவலர்களும் அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கே, விசுவாசமாகவும் ஆதரவாளர்களாகவும் இருக்கின்றார்கள்” என்றார். அப்போது கூட்டத்தின் ஒரு பகுதியினர் கைதட்டி அதை மெய்ப்பிக்கும் விதமாக ஆரவாரம் செய்தனர்.

அவரைத் தொடர்ந்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், அதிகாரிகளுக்கும் இடையேயான உறவு எந்தவிதத்தில் இருக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பேசினார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு! டிச.3ல் வாக்கு எண்ணிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.