ETV Bharat / state

புதுக்கோட்டையில் கொட்டும் மழையிலும் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி! - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி

புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே கீழத்தாணியத்தில் காட்டு அய்யனார் கோவிலில் ஜல்லிக்கட்டுப் போட்டி மழையுடன் நடைபெற்றது.

புதுக்கோட்டையில் கொட்டும் மழையிலும் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி!

author img

By

Published : Feb 3, 2023, 1:51 AM IST

புதுக்கோட்டையில் கொட்டும் மழையிலும் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி!

புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே உள்ள கீழத்தாணியத்தில் காட்டு அய்யனார் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது. ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்னதாக இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜல்லிக்கட்டு உறுதி மொழியை வாசிக்க, வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 600 காளைகளும், 300 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி 6 சுற்றுகளாக நடைபெற்றது. ஒவ்வொரு சுற்றிலும் தலா 100 மாடுகளும், 50 மாடுபடி வீரர்களும் கலந்துகொண்டனர். வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்க்கப்பட்ட காளைகள் துள்ளி குதித்து சீறிப் பாய்ந்து வருவதை மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டி தழுவி வருகின்றனர்.

மேலும், ஜல்லிக்கட்டில் சிறந்த முறையில் காளைகளைத் தழுவிய மாடுபிடி வீரர்களுக்கும் நீண்ட நேரம் வீரர்களை திணறடித்து, களமாடிய காளைகளுக்கும் சைக்கிள் கட்டில், பீரோ, டைனிங் டேபிள், சில்வர் பாத்திரங்கள், ஃபேன், மிக்ஸி குக்கர், கிரைண்டர், வெள்ளி காசு, ரொக்கப்பணம் உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட்டன.

காளைகள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்படுகிறது. மேலும் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அதேபோல் சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்டப் பல்வேறு துறைகள் கண்காணிப்பில் இந்த ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இந்த ஜல்லிக்கட்டை சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இதில் அதிக காளைகளை அடக்கி முதல் பரிசு வென்ற மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள எல்.இ.டி.டிவி வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவு பெற்றபோது மொத்தம் 23 பேருக்கு காயம் ஏற்பட்டிருந்தது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க:சிலம்பத்தில் உலக அளவில் தங்கம் வென்ற அரசுப்பள்ளி மாணவி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.