புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலையைச் சேர்ந்த ராஜ்முகமது மகன் பக்ருதீன்(20). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு புதுக்கோட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
பக்ருதீன் இன்று வழக்கம் போல் இருசக்கர வாகனத்தில் அன்னவாசலில் இருந்து புதுக்கோட்டை வழியாக சென்று கொண்டிருந்தபோது பெருஞ்சுனை பகுதி முக்கம் அருகே வந்த டிப்பர் லாரி மீது எதிர்பாரதவிதமாக பக்ருதீன் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.