கரோனா வைரஸ் பரவலையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்திக்கொள்ள சில சமூக விரோதிகள் காட்டுப் பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட தொடங்கியுள்ளனர். அவர்களை காவல் துறையினர் விரட்டி பிடித்து கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோட்டைக்காடு மற்றும் ராசியமங்கலம் பகுதிகளில் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல்கள் வைத்திருந்தனர்.
சந்தேகத்தின் பேரில் அப்பகுதியில் ஆய்வு செய்த வடகாடு காவல் நிலைய ஆய்வாளர் பரத் ஸ்ரீனிவாஸ் தலைமையிலான காவல் துறையினர் காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஊறல்களை அழித்தனர். மேலும் சாராயம் காய்ச்ச முயன்ற கோட்டைகாட்டைச் சேர்ந்த பொன்சால் என்பவரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: கள்ளச்சாராயம் கடத்திய ஆயுதப்படை காவலர் கைது!