ETV Bharat / state

மனைவி நகையை அடகு வைத்து குடி.. புதுக்கோட்டையில் தம்பதி தற்கொலை.. நடந்தது என்ன? - Pudukkottai suicide case

Pudukkottai Couple Suicide: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே திருமணமாகி 14 மாதங்கள் ஆகிய இளம் தம்பதியினர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் தற்கொலை செய்துக்கொண்ட தம்பதி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 10:56 PM IST

புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட தகராறு காரணமாக திருமணம் ஆகி 14 மாதமே ஆன நிலையில் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நகைகளை அடகு வைத்து குடித்த கணவர்: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம் நிம்புநேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த பொற்பனையான் என்ற இளைஞருக்கும், கொத்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பிரியங்கா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், பொற்பனையானுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவருக்கும் அவரது மனைவி பிரியங்காவிற்கும் கருத்து வேறுபாடால் அடிக்கடி சண்டை வந்ததாக கூறப்படுகிறது. மேலும், பிரியங்காவின் நகைகளையும் அவரது கணவர் அவருக்கு தெரியாமல் அடகு வைத்ததாகவும் கூறப்படுகிறது.

மனமுடைந்த மனைவி தற்கொலை; கணவரும் தற்கொலை செய்த சோகம்: அடகு வைத்த பணத்தில் மது குடித்து வந்ததை அறிந்த பிரியங்கா, இதனால் மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத போது தற்கொலை செய்து கொண்டார். தனது மனைவி தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர் பொற்பனையானும் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மற்றொரு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் விசாரணை: இது குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், ஆலங்குடி காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்து கணவன் மனைவி இருவரின் சடலங்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனைத்தொடர்ந்து, கணவரின் குடிப்பழக்கத்தினால் தான் பிரியங்கா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அதைப் பார்த்த அச்சத்தில்தான் பொற்பனையான் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து ஆலங்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பறிபோகும் உயிர்கள்; மதுவிலக்கு அமலுக்கு வருவது எப்போது?: திருவரங்குளம் அருகே குடி பழக்கத்தினால் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் திருமணம் ஆகி 14 மாதத்தில் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் இன்னும் இது போன்ற குடிப்பழக்கத்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதைத் தடுக்க தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவரங்குளம் அருகே குடும்பத்தில் குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, திருமணம் ஆகி 14 மாதங்களில் மனைவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதைக் கண்ட அவரது கணவரும் தற்கொலை செய்து கொண்டு தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இதுபோன்று மது குடிப்பதால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில், மது விற்பனையை ஊக்கப்படுத்துவதை தவிர்த்துவிட்டு, இதுபோன்று ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தற்கொலை தீர்வல்ல
தற்கொலை தீர்வல்ல

தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?: தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வரும் அனைத்து கட்சிகளும் தேர்தலில் போட்டியிடும் போது, மது விலக்கு அமல் என வாக்குறுதி கூறிவருகிறது. ஆனால், அதனை செயல்படுத்தாமல் தேர்தலின்போது அளிக்கும் வாக்குறுதியை நிறைவேற்றாமல் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ம.பி.யில் விஷவாயு தாக்கி 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.