ETV Bharat / state

மனைவி தற்கொலை: கணவன் உள்பட மூவர் கைது! - பெண் தற்கொலை

அறந்தாங்கி அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவன் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

arrest
arrest
author img

By

Published : Jun 24, 2021, 8:57 PM IST

புதுக்கோட்டை: திருமணமான ஆறு மாதத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் தற்கொலை செய்தது ஆர்டிஓ விசாரணையில் தெரியவந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள பிடாரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அன்பு தமிழன். இவர் விஜயபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து, கடந்தாண்டு அக்டோபர் 11ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி அப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இச்சம்பவம் தொடர்பாக நாகுடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலை செய்த பெண்ணுக்குத் திருமணமாகி ஆறு மாதங்களே ஆனதால், ஆர்டிஓ தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இதில் பெண்ணின் கணவர், அவரது மாமியார், மாமனார் ஆகிய மூவரும் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்தது தெரியவந்தது. இந்தநிலையில், விசாரணையானது அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளருக்கு(டிஎஸ்பி) மாற்றப்பட்டு, இளம்பெண்ணின் கணவர் அன்பு தமிழன், மாமனார் பழனிவேல், மாமியார் கற்பகம் ஆகிய மூவரையும், வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் அறந்தாங்கி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: வரதட்சணை தீயில் கருகிய விஸ்மயா- நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.