ETV Bharat / state

ப.சிதம்பரத்தின் குற்றச்சாட்டுகளை நான் மதிப்பதேயில்லை: ஹெச்.ராஜா! - Local Body Elections

புதுக்கோட்டை: ஊழல் குற்றச்சாட்டுகளால் சிறை சென்று திரும்பியுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் குற்றச்சாட்டுகளை மதிப்பதில்லை என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

hraja-about-pchidambaram-comments-on-bjp-government
hraja-about-pchidambaram-comments-on-bjp-government
author img

By

Published : Dec 12, 2019, 5:51 PM IST

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக, பாஜக கட்சியினர் கலந்துகொண்ட உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

இதையடுத்து ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி பெரும் வெற்றிபெறும். விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் ஏற்பட்ட தோல்வியால் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க முடியாமல் திமுக பயத்தில் உள்ளது.

ஹெச்.ராஜா செய்தியாளர் சந்திப்பு

இலங்கை தமிழர்கள் அவர்களின் மண்ணைக் காப்பாற்றுவதற்கான முழு நடவடிக்கையை எடுக்க பிரதமர் மோடியால் தான் முடியும். ப.சிதம்பரத்தின் குற்றச்சாட்டுகளை நான் மதிப்பதேயில்லை. ஊழல் குற்றச்சாட்டால் சிறை சென்று திரும்பியவர் வெட்கித் தலைகுனிய வேண்டும். விரைவில் சிதம்பரத்தின் குடும்பமே சிறைக்கு செல்லும் எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'வீழ்வேனென்று நினைத்தாயோ, ஒரு நாளும் நாங்கள் வீழமாட்டோம்' - சிதம்பரம் சூளுரை

Intro:Body:இன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற அதிமுக மற்றும் பாஜகவினர் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் நடத்தினர் அதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பாஜக எச் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

எச் ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெறும். ப. சிதம்பரம் ஒரு கிரிமினல் குற்றவாளி இன்னும் இரண்டு நாட்கள் ஜெயிலில் வைத்து இருந்தால் 108 ஆக நல்ல நம்பராக இருந்திருக்கும் . அவர் வெளியில் வந்து பேசுவதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டாமா .அவர் குடும்பமே விரைவில் மீண்டும் சிறைக்கு செல்லும். தமிழகத்தில் முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப பிரதமர் மோடி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். எனவே தான் அவர்களுக்கு குடியுரிமை சட்டம் வழங்கப்படவில்லை. நாங்குநேரி விக்கிரவாண்டி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் ஸ்டாலினுக்கு உண்டான பயம் காரணமாகவே உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் வழக்கு தொடுத்து வருகிறார் என்று தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.