ETV Bharat / state

மினி கிளினிக் பணியாளர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர் - அமைச்சர் விஜயபாஸ்கர் - மினி கிளினிக் பணியாளர்கள்

புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் உள்ள மினி கிளினிக்கில் பணியாற்றுவதற்கு ஓரிரு நாட்களில் தலா 2 ஆயிரம் மருத்துவர்கள், செவிலியர், உதவியாளர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

health
health
author img

By

Published : Feb 10, 2021, 1:49 PM IST

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில், ஆட்சியர் உமா மகேஸ்வரி, காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், காவல்துறையினருக்கு கரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு ஊசி போடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 743 பேர் தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டுள்ளனர்.

முன் உதாரணமாக பல மாவட்டங்களில் ஆட்சியர் உள்ளிட்ட அரசுத் துறை உயர் அலுவலர்கள் தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டுள்ளனர். தடுப்பு மருந்து குறித்து முன்களப் பணியாளர்கள், பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு உள்ளது. ஒரு சிலர் தயக்கம் காட்டுகின்றனர். தயக்கம் தேவையில்லை இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இதுவரை தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு எந்தவிதமான பக்கவிளைவும் ஏற்படவில்லை. அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம் விரைவில் அனுமதி கிடைத்துவிடும் அதன்பிறகு அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

அம்மா மினி கிளினிக்கை பொறுத்தவரை ஒவ்வொரு மாவட்டத்திலும் சுகாதாரத்துறை சார்பில் 2000 மருத்துவர்கள், 2000 செவிலியர், 2000 சுகாதார உதவியாளர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பணி நியமனம் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடத்தப்படும். பணிகள் ஓரிரு நாட்களில் முடிவடைந்துவிடும். அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: முதலமைச்சர், அமைச்சர்களுக்கு விரைவில் கரோனா தடுப்பூசி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.