புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையிலுள்ள அவரது சொந்தத் தொகுதியான விராலிமலையில் அதிமுகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.
அங்கு பொதுமக்களை சந்தித்துவிட்டு இலுப்பூர் வந்த அவர், மக்களிடம் உரையாடிய பின்னர் அருகிலுள்ள டீக்கடைக்கு சென்று அவரே டீ தயார் செய்து அனைவருக்கும் கொடுத்தார். பின்னர் அவரும் டீ அருந்தினார். அமைச்சரின் இந்த செயல் பொதுமக்களை கவரும் வகையில் இருந்ததாக அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.