புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தனக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.
விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மலைகுடிப்பட்டி பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், "உங்களுக்காக நான் எதையும் செய்வேன். விஜயபாஸ்கர் என்ற ஒரு உயிர் உங்களுக்காகத் துடித்துக்கொண்டிருக்கிறது. எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் நீங்கள் கவலையில்லாமல் இருங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்.
மலைக்குடிப்பட்டி மண்ணிலிருந்து கூறுகிறேன். என்னையே நான் உங்களுக்கு எழுதித்தருகிறேன். பட்டா மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுடைய மனது மட்டும் எனக்கு ஆதரவாக இருந்தால்போதும்" என்று உருக்கமாகப் பேசி வாக்குகளைச் சேகரித்தார்.