புதுக்கோட்டையில் தேசிய ஒற்றுமை விழிப்புணர்வு இயக்கம் சார்பில் லடாக் குறித்த கருத்தரங்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்புரையாற்றினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஜம்மு காஷ்மீரில் செயல்படுத்தியுள்ள 370 சட்டத்திருத்தத்தை காங்கிரஸ் தலைவர்களும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லாத மாயாவதி, நவீன் பட்நாயக் உள்ளிட்டவர்கள் இச்சட்ட திருத்தத்தை ஆதரிக்கின்றனர். ஆனால், தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு சட்டபிரிவு 370 பற்றி ஏதும் தெரியாது. கனிமொழி இளம் லடாக் என்று சொன்னது மாதிரி வரைபடத்தில் லடாக் எங்க இருக்கும்னு என்று தெரியாது.
இவர்கள் எல்லாம் ஐந்து குருடர்கள் யானையைப் பார்த்து சொன்னது மாதிரியே பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசுகையில், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் இந்து விரோத போக்குகள் அதிகரித்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் இந்து விரோத தீயசக்திகள் எதிராகப் பேசுவது ஏன்?, நேற்று முன்தினம் பகவத் கீதையில் வரும் கண்ணனை ஒரு கூட்டம் இழிவாக பேசுகிறது.
இனிமேல் எவரேனும் பகவத் கீதைக்கு எதிராக விமர்சனம் செய்வார்கள் என்றால், அதற்கு எதிரான போக்கு தொடருமானால், இந்துக்கள் போராட தயங்க மாட்டார்கள் . ஆகவே இந்த மாதிரியான விரோத போக்கினை அனைவரும் நிறுத்திக் கொள்ளவேண்டும். நம் முன்னோர்கள் எங்கிருந்தோ அடித்து விரட்டப்பட்டு இங்கு வந்து குடியேறவில்லை.
இங்கேயே பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து இருக்கிறார்கள், அவர்கள் சிறப்பான ஆட்சி நடத்தியுள்ளனர். கீழடி ஆய்வில் 10 அடிதான் தோண்டப்பட்டுள்ளது, இன்னும் ஆழமாக 33 அடி வரும் போது பல்வேறு விஷயங்கள் தெரியவரும் என்றார்.
இதை படிங்க : 'நான் வீழ்வேன் என நினைத்தாயோ' -தமிழிசை சௌந்தரராஜன்