புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் சத்துணவுப் பணியாளராக பணியாற்றிவருபவர் பாரிசா பேகம். இவருக்கு நீண்ட நாட்களாக மாணவர்களுக்குத் தலை வாழையுடன் பிரியாணி வழங்க வேண்டும் என்பது விருப்பம்.
இதை நிறைவேற்றும் விதமாக பள்ளியில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் தலை வாழையில் மட்டன் பிரியாணி செய்து விருந்து வைத்து அசத்தினார்.
தினமும் சைவ உணவுகளை சாப்பிட்டு வந்த மாணவர்களுக்கு இந்த அசைவ விருந்து சுவையான விருந்தாக அமைந்தது. சத்துணவுப் பணியாளரின் இச்செயலை ஆசிரியர்களும், பெற்றோர்களும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்புவரை சத்துணவு திட்டத்தை நீட்டிக்க வேண்டும் - ஆசிரியர்கள் கோரிக்கை!