புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியைச்சேர்ந்த சங்கர் என்பவரது மகள் அஞ்சலி (16). இவர் அதே பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அஞ்சலி, ஆலங்குடி அருகேவுள்ள கே.வி. கோட்டையில் தனது சித்தப்பா சிவகுமார் என்பவரது வீட்டில் கடந்த இரண்டு மாதம் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அஞ்சலி, அப்பகுதியிலுள்ள பெருங்குளம் ஊறணியில் குளிப்பதற்காக சென்றார். அப்போது அதிர்பாராத விதமாக சிறுமி நீரில் மூழ்கினார். இதைக்கண்ட சக சிறுமி ஒருவர், கூச்சலிட்டு அருகிலிருந்தவர்களை அழைத்தார்.
இதையடுத்து வந்த அருகிலிருந்தவர்கள் நீண்ட நேரத்திற்கு பிறகு, சிறுமியை சடலமாக மீட்டனர். பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குடி காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். குளத்தில் குளிக்கச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஓமலூர் சுங்கச்சாவடியில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான பான் மசாலா பறிமுதல்