ETV Bharat / state

குடிநீர் இணைப்பு: 4 வீடுகள் இருக்கும் பகுதியில் 26 வீடுகள் இருப்பதாகக்கூறி மோசடி - பணம் மோசடி

புதுக்கோட்டையில் 4 வீடுகள் மட்டுமே உள்ள பகுதியில் 26 வீடுகள் இருப்பது போல் கணக்கு காண்பித்து மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் மோசடி செய்யப்பட்டதாக பாஜக மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு நிர்வாகி குற்றம் சாட்டியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 4, 2022, 4:24 PM IST

புதுக்கோட்டை : ஆலங்குடி அருகேவுள்ள பள்ளத்துவிடுதி ஊராட்சிக்கு உள்பட்ட வகுத்தாண்டி குடியிருப்பு என்னும் பகுதியில் 4 குடும்ப மக்கள் மட்டுமே வசித்து வருவதாகவும்; ஆனால் இந்த பகுதியில் 26 குடும்ப மக்கள் வசிப்பதாகவும் பொய் கணக்கு காட்டி, அவர்களுக்கு மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

மேலும், இதில் திருவரங்குளம் ஒன்றிய அதிகாரிகள் கணக்கு பதிவேற்றம் செய்து சுமார் 2 லட்சம் ரூபாய் வரை நிதி முறைகேடு செய்துள்ளதாக பாஜக மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு மாவட்டத்தலைவர் முருகேசன் திருவரங்குளம் ஒன்றிய அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட கிராமத்திற்குச் சென்று பார்த்தபோது அங்கு நான்கு குடும்ப மக்களுக்கு, அந்தப் பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த பகுதியைச்சேர்ந்த மக்கள் கூறுகையில், "நான்கு குடும்ப மக்களும் 12 வாக்காளர்களும் மட்டுமே இந்த வகுத்தாண்டி குடியிருப்புப்பகுதியில் உள்ளனர். ஆனால், அதிகாரிகள் 26 குடும்பங்கள் இருப்பது போலவும் அவர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது போலவும் கணினியில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இந்த நான்கு குடும்ப மக்களுக்கும் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. அருகே உள்ள குடிநீர் மேல்நிறை நீர்த்தேக்கத்தொட்டி சுத்தம் செய்து பல ஆண்டுகள் ஆகிறது. ஏணிப்படி இல்லாததால் அந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் இருந்து தூய்மையற்ற குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இதனால், அதனை மக்கள் குடிக்க முடியாமல் போன சூழலில், தற்போது காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் அவ்வப்போது குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் முறையிட ஏதும் நடந்திருந்தால் அது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து, தங்களின் குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்' என்றார்.

பாஜக மத்திய அரசின் மாநில திட்டங்கள் பிரிவு மாவட்டத்தலைவர் முருகேசன் கூறுகையில், “பள்ளத்துவிடுதி ஊராட்சியில் நான்கு குடும்ப மக்களுக்கு மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ், குடிநீர் குழாய் இணைப்பு வழங்கிவிட்டு, 26 குடும்பங்களுக்கு வழங்கியதுபோல் திமுகவைச் சேர்ந்த ஒப்பந்தகாரர் மோசடி செய்து விட்டார்.

4 வீடுகள் இருக்கும் ஏரியாவில் 20 வீடுகள் இருப்பதாகக் கூறி மோசடி

இதற்கான ஆதாரங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இருவருக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டும் விநியோகம் நடைபெறவில்லை. இந்தத் திட்டத்தின் கீழ் நடந்துள்ள முறைகேடு குறித்து அதிகாரிகள் உடனே விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: உதயநிதி விரைவில் துணை முதல்வராக வர வேண்டும் - கெளதம் சிகாமணி எம்.பி.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.