ETV Bharat / state

புதுக்கோட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர்கள் ஆய்வு! - அமைச்சர்கள் ஆய்வு

புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் முடிவடைந்த காரீப் பருவத்தில், 32.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை செய்துள்ளதாக உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தெரிவித்துள்ளார்.

நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர்கள் ஆய்வு

author img

By

Published : Oct 25, 2020, 2:17 AM IST

உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் புதுக்கோட்டை வழியாக அரசு நிகழ்ச்சிக்கு சென்ற போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் இணைந்து இன்று (அக்.24) புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், மணவிடுதி ஊராட்சி, கிடாரம்பட்டியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் உமாமகேஸ்வரி உடனிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது,

அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை சிறந்த முறையில் மேற்கொண்டதால், கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு முன்னோடியாக விளங்குகிறது.

அந்த வகையில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. கரோனா தொற்று காலத்திலும் வளர்ச்சித்திட்ட பணிகள், பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுகின்ற பணிகள் எந்த விதத்திலும் பாதிப்படைய கூடாது என்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கு தினந்தோறும் உரிய உத்தரவுகளை வழங்கி வருகிறார்.

குறிப்பாக உணவுத்துறையில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 1 வரை காரீப் பருவம் ஆகும். கடந்த காரீப் பருவத்தில், 32 லட்சத்து 41 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது தான் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு ஜுன் 6 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு குறுவையும், சம்பாவும் சேர்ந்து வந்த விளைச்சல் 23 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே இருந்தது.

ஆனால் குறுவை இல்லாத இந்த பருவத்திலும் 32.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 6 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். ரூ. 6,130 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் 24 மணி நேரத்தில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் காரணம் சட்டப்பேரவையில் ஜெயலலிதாவால் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட இ-கொள்முதல் முறையாகும்.

இந்த ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி காரீப் பருவம் தொடங்கியது. நேற்றைய (அக்.23) தினம் வரை 3 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது, குறுவை சாகுபடி வரலாற்றில் எந்த காலத்திலும் நடைபெற்றது கிடையாது. ஒரு நாளைக்கு 4 லட்சம், 4.50 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதுடன், இன்றைய (அக்.24) தினம் மட்டும் டெல்டா, டெல்டா அல்லாத பகுதிகளில், 5 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதன்படி 75 லட்சம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

நெல் கொள்முதல் செய்வது, நெல் உடனடியாக அரவைக்கு அனுப்புவது போன்ற பணிகள் முறையாக நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்த வரையில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கேற்ப அந்தந்த பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் புதிய பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகளிடமிருந்து கோரிக்கை வந்தால் அந்தப் பகுதிகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு ரூ.5 கோடி மதிப்பீட்டில், களத்துடன் கூடிய நிரந்தர கட்டடம் கட்டப்பட உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களிலேயே குறுவை சாகுபடி முடிந்து விடும். எதிர்பார்ப்புக்கு மாறாக 10 நாட்களுக்கு முன்னறே மழை வந்துவிட்டது. இதனால் ஏற்பட்ட சிறு பிரச்னைகளும் ஓரிரு நாளில் உடனடியாக சரி செய்யப்பட்டது.

டெல்டா, டெல்டா அல்லாத பகுதிகளில் 90 விழுக்காட்டிற்கும் மேல் நெல் அறுவடை செய்யப்பட்டுவிட்டது. இதில் விவசாயிகள் சாகுபடி செய்த 85 சதவீத நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த காலங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு நாளைக்கு 800 நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்ய முடியும். தற்பொழுது ஒரு நாளைக்கு 1,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரே ஊரில் 1,000 மூட்டைக்கு மேல் நெல் வரும் பட்சத்தில் அங்கேயே மற்றொரு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 25 ஊர்களில் ஒரே இடத்தில் இரண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதன்படி விவசாயிகளின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தினை ஜெயலலிதா 2002 ஆம் ஆண்டு அறிவித்தார்கள். இத்திட்டமே அனைத்து காலங்களிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதம் மட்டுமே இருக்க அனுமதி வழங்கி உள்ளது. மழைக் காலத்தில் ஈரப்பதத்தை அதிகரிக்க, அனுமதி வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கான உத்தரவு நவம்பர் மாதம் வரப்பெறும். நவம்பர், டிசம்பர் போன்ற மழைக் காலங்களில் மட்டுமே இதற்கான உத்தரவு கிடைக்கும். ஆனால் அக்டோபர் மாதமே இதற்கான அனுமதியை வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்றைய தினம் நாகப்பட்டினத்தில் மத்தியக் குழு ஆய்வு செய்து வருகிறது. நாளைய தினம் திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளார்கள். இதனை பொறுத்தே அனுமதி வழங்குவார்கள்.

ஈரப்பதத்தை, 22 சதவீதமாக உயர்த்தி வழங்க அனுமதி கோரப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அனுமதி வழங்கப்படும் என நம்புகிறோம். ஈரப்பதம் காரணமாக விவசாயிகளிடமிருந்து எந்த இடத்திலும் நெல் கொள்முதல் செய்யாமல் இருக்கக் கூடாது என்பதனால் சிறிது ஈரப்பதம் இருந்தாலும் அந்த நெல்லை கொள்முதல் செய்து உடனடியாக அரவைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் காலங்களில் உணவுத்துறையில் உள்ள கண்காணிப்புக் குழுக்கள் மூலம் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படும். விவசாயிகளிடமிருந்து வரப்பெறும் புகார்களின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து தவறு இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஒரு நாடு, ஒரே ரேசன் திட்டம் தமிழ்நாட்டில் அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இத்திட்டத்தில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் முறையில் கைரேகை வைப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்ததால் தற்பொழுது இம்முறை நிறுத்தப்பட்டுள்ளது. இதனை சரிசெய்த பின் மீண்டும் படிப்படியாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். தற்பொழுது பழைய முறையிலேயே மின்னணு குடும்ப அட்டைகளை ஸ்கேன் செய்து பொருட்களை வாங்கி கொள்ளலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களில் குறிப்பிட்ட விழுக்காட்டில் மட்டுமே நியாய விலைக்கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே அனைவருக்கும் பொது விநியோகத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கரோனா காலத்தில் மத்திய அரசு அறிவிப்பின்படி முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

எனினும் முன்னுரிமை இல்லாத ஒரு கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.382 கோடி நிதியை உடனடியாக ஒதுக்கி, அனைவருக்கும் தலா ஐந்து கிலோ அரிசி வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று பருப்பு, சர்க்கரை, எண்ணை போன்ற பொருட்களை விலையில்லாமல் வழங்கிய ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்.

பண்ணை பசுமைக் கடைகளில் பெரிய வெங்காயம் ரூ.45க்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. வெங்காய விலைச்சல் உள்ள இடத்தில் மழை கூடுதலாக பெய்த காரணத்தினால் வெங்காயம் கொள்முதல் செய்தல், எடுத்து வருதல் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளது. வெங்காய விலை ஏற்றம் தற்காலிகமானதாகும். அரசு இதனை கண்காணித்து வருகிறது. எனினும் இந்த விலையேற்றம் தொடர்ந்தால் நியாய விலைக் கடைகளில் பொது மக்களுக்கு வெங்காயம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நுகர்பொருள் வாணிபக் கழகம், உள்ளாட்சித் துறைகளில் அம்மா சிமெண்ட் வழங்கப்பட்டு வருகிறது. அந்தந்த பகுதிகளில் தேவைக்கேற்ப அம்மா சிமெண்ட் வழங்கப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’அரசியல் முதிர்ச்சியின்றி ஸ்டாலின் பேசுகிறார்’: அமைச்சர் காமராஜ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.