தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிளைச்சிறையில், காவலர்கள் தாக்கியதில் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உடல் நிலை மோசமடைந்து இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டுமென தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை செல்போன் கடை உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று(ஜூன் 24) ஒருநாள் மாவட்டத்திலுள்ள 210 கடைகளும் அடைக்கப்பட்டு, புதிய பேருந்து நிலையம் அருகே, உயிரிழந்த இருவரது உருவப்படத்திற்கும் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.