ETV Bharat / state

'ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் ஈபிஎஸ் - ஓபிஎஸ்' - மு.க. ஸ்டாலின் புதுக்கோட்டை தேர்தல் பிரச்சாரம்

புதுக்கோட்டை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் ஈபிஎஸ் - ஓபிஎஸ் எனப் புதுக்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

mk stalin election campaign
மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை
author img

By

Published : Mar 19, 2021, 3:14 PM IST

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

புதுக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் முத்து ராஜா மற்றும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மற்ற சட்டப்பேரவைத் தொகுதிகளான திருமயத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான முன்னாள் அமைச்சர் ரகுபதி, ஆலங்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மெய்யநாதன், விராலிமலை தொகுதி பழனியப்பன் ஆகியோரை ஆதரித்தும், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் கட்சி சார்பில் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிடும் ராமச்சந்திரன், காந்தர்வ கோட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் சின்னத்துரை ஆகியோரை ஆதரித்தும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புதுக்கோட்டையில் பரப்புரை மேற்கொண்டார்.

dmk candidates pudukottai
புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்கள்

அப்போது அவர் பேசியதாவது:

மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை அறிமுகப்படுத்திய திமுக

பெண்கள் பயன்பெறும் வகையில் திருமண உதவித் திட்டம், மகளிர் சுய உதவிக் குழு எனப் பல்வேறு திட்டங்களைத் தொடங்கியது திமுக அரசுதான். திமுக காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டங்கள்.

அதிமுகவில் ஒருவர் ஜெயித்தாலும் அது பாஜக ஜெயித்ததாக மாறிவிடும். எனவே தமிழ்நாட்டில் பாஜகவை நுழையவிடக் கூடாது. அதனால் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது.

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் தேர்தல் பரப்புரை

தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் வெற்றிபெற்ற ஒரே ஒரு உறுப்பினரும், பாஜக எம்பியாகவே உள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் ஈபிஎஸ்-ஓபிஎஸ். நீட் தேர்வு, ஜிஎஸ்டி போன்ற திட்டங்களை மறுத்தவர் ஜெயலலிதா. அவர் மறைவுக்குப் பிறகு தற்போது அவர்கள் இருவரும் அவற்றிற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

குட்கா விற்பனைக்கு உடந்தையாக இருந்த அமைச்சர்

மக்கள் நலமாக இருக்கவே மக்கள் நல்வாழ்வுத் துறை என்று ஒரு துறை ஒதுக்கப்பட்டது. அதில் அமைச்சராக இருப்பவர் குட்கா விற்பனைக்கு உடந்தையாக இருந்துள்ளார். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல் துறை தலைவருக்கு குட்கா விற்பனைக்காக மாமூல் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர் கரோனாவைக் கட்டுப்படுத்தாமல் அதிலும் கொள்ளை அடித்ததாக ஸ்டாலின் பேச்சு

கரோனாவைக் கட்டுப்படுத்தாமல் கொள்ளை

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அதிமுகவினரின் பணப்பட்டுவாடாவால் நிறுத்தப்பட்டது. இதற்கு நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவருகிறது.

கரோனாவைக் கட்டுப்படுத்தாமல் அதிலும் அமைச்சர் கொள்ளை அடித்துள்ளார். தற்போது இரண்டாவது அலை வருவதால் அனைவரும் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.

dmk election campaign pudukottai
புதுக்கோட்டை திமுக பரப்புரையில் கூடிய கூட்டம்

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

இதையும் படிங்க: ’அதானி துறைமுக விரிவாக்கப் பணியை அதிமுக தடுத்து நிறுத்தும்’ - ஓ.பி.எஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.